தியாகிகள் நிகழ்ச்சியில் பங்கேற்ற பீகார் முதல்வர் நிதீஷ் மீது செருப்பு வீச்சு... இளைஞர் கைது
பாட்னா: தியாகிகள் நிகழ்ச்சியில் பங்கேற்ற பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் முதல்வர் நிதீஷ்குமார், இன்று பக்தியார்பூரில் சுதந்திரப்போராட்ட தியாகிகள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் 25 வயது இளைஞர் ஒருவர் நிதீஷ் மீது செருப்பை வீசி எறிந்தார். ஆனால், அதிர்ஷ்டவசமாக அந்தச் செருப்பு நிதீஷ் மீது படவில்லை.

உடனடியாக அந்த இளைஞரைப் போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவரது பெயர் பர்வேஷ் குமார் ராய் எனத் தெரியவந்துள்ளது.
மேலும், பீகார் கல்வித் திட்டத்தில் திருப்தியில்லாத காரணத்தால், கோபத்தில் இவ்வாறு செருப்பை வீசியதாக போலீசாரிடம் பர்வேஷ் தெரிவித்ததாக பாட்னா மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் மனு மகராஜ் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கடந்த 2013ம் ஆண்டு பெகுசாராய் மவட்டத்தில் நடைபெற்ற ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் 'சங்கல்ப்ப யாத்திரை' நிகழ்ச்சியில் பங்கேற்ற போதும், நிதிஷ் குமாரை நோக்கி செருப்பு வீசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications