டெல்லி முதல்வர் பதவிக்கு ஸ்மிருதி இரானியை நிறுத்துகிறது பாஜக?
டெல்லி: அடுத்தாண்டு நடைபெற உள்ள டெல்லி சட்டசபைத் தேர்தலில் பாஜகவின் முதல்வர் வேட்பாளராக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி அறிவிக்கப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்தாண்டு நடைபெற்ற டெல்லி சட்டசபைத் தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்ற போதும், பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி அமைக்க மறுத்து விட்டது. அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் ஆதரவுடன் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தது. அக்கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதல்வரானார்.

ஆனால் ஒன்றரை மாத காலம் ஆட்சி நடத்திய கெஜ்ரிவால், பொசுக்கென்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப் பட்டது.
இந்நிலையில் டெல்லியில் ஆட்சி அமைக்க எந்த கட்சியும் விருப்பம் தெரிவிக்காததால், சட்டசபை கலைக்கப்படுகிறது. டெல்லியில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடத்தப்படும் எனத் தெரிகிறது.
ஆம் ஆத்மி:
தேர்தல் தேதியே இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், ஆம் ஆத்மி முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு விட்டது. அக்கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்படுவதாக ஆம் ஆத்மி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே மத்தியில் புதிய ஆட்சி அமைத்துள்ள பாஜக ஹரியானா, மகாராஷ்டிரா மாநில சட்டசபைத் தேர்தல்களிலும் அமோக வெற்றி பெற்றுள்ளது. எனவே, டெல்லி சட்டசபைத் தேர்தலிலும் நிச்சயம் தங்களுக்கு வெற்றி கிடைக்கும் என அக்கட்சி எதிர்பார்க்கிறது.
எனவே, இம்முறை தங்களது கட்சியின் முதல்வர் வேட்பாளராக மத்திய மனிதவளத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியை அவர்கள் களமிறக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
கட்சித் தலைமையின் கணக்கு:
ஏற்கனவே, டெல்லி முதல்வர் வேட்பாளர் பட்டியலில் ஹர்ஷ்வர்தன், சதீஷ் உபாத்யாய், ஜெகதீஷ் முகி மற்றும் விஜய் கோயல் ஆகியோரது பெயர்கள் உள்ளன. ஆனால், அவர்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி ஸ்மிருதி இரானி டெல்லி முதல்வர் வேட்பாளர் ஆவார் என கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்மிருதி இரானியை எப்படியும் வெற்றி பெறச் செய்து டெல்லி மக்கள் முதல்வராக்கி விடுவார்கள் என கட்சித் தலைமை கணக்குப் போடுகிறதாம்.
இதற்கிடையே, டெல்லி பாஜக தலைவர்களிடையே நிலவும் உட்கட்சிப் பூசலால் கட்சித் தலைவர் அமீத் ஷா கடும் அதிருப்தியடைந்துள்ளார். தலைவர்கள் அனைவரையும் கூப்பிட்டு கூட்டம் நடத்திய அவர், அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான் பெரும்பான்மை பலத்தைப் பெற முடியும். கடந்த தேர்தலில் யாரும் ஒருங்கிணைந்து செயல்படாத காரணத்தால்தான் பெரும்பான்மை பலம் கிடைக்காமல் போய் விட்டதாக சத்தம் போட்டாராம்.
இந்த உட்கட்சிப் பூசல் காரணமாகத்தான் இரானியை உள்ளே கொண்டு வருகிறார்களாம். பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் அமித் ஷாவிற்கு மிகவும் நெருக்கமானவர்களில் ஸ்மிருதி இரானியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications