ஸ்மிருதி இரானியை மோடியின் 2வது மனைவி என்று கூறிய காங். எம்.எல்.ஏ.. பாஜக கொந்தளிப்பு
குவஹாத்தி: பிரதமர் மோடியின் 2-வது மனைவி மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி என சிலர் பேசிக் கொள்வதாக அஸ்ஸாம் மாநில முன்னாள் அமைச்சரும் எம்.எல்.ஏ.வுமான நிலாமனி சென் டேகா பேசியிருப்பது கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவருக்கு எதிராக பா.ஜ.க.வினர் அஸ்ஸாம் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அஸ்ஸாம் மாநில முன்னாள் வேளாண்துறை அமைச்சர் நிலாமனி சென் டேகா. இவர் நல்பாரி மாவட்டத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் நேற்று பேசுகையில், பிரதமர் மோடியின் 2-வது மனைவிதான் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி என சிலர் பேசிக் கொள்கிறார்கள் எனக் கூறியிருந்தார்.

இது பா.ஜ.க.வை கடும் ஆத்திரமடைய வைத்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த பா.ஜ.க. பொதுச்செயலர் ராம் மாதவ், ஸ்மிருதி இரானி குறித்த வெட்கக் கேடான விமர்சனம் இது என்றார்.
அஸ்ஸாம் மாநில பா.ஜ.க. தலைவர் சர்பானந்தா சோனோவால், காங்கிரஸ் கட்சியினர் மனம் எவ்வளவு அழுக்கானது என்பதை வெளிப்படுத்துகிறது; உடனடியாக அவரை காங்கிரஸ் கட்சியில் இருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அத்துடன் அஸ்ஸாம் முழுவதும் நிலாமனி சென் டேகாவுக்கு எதிராக பா.ஜ.க.வினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications