சுவர் முழுக்க ஓட்டைகள்.. மோசமான கட்டிடம்.. பாம்பு கடித்து இறந்த ஷகாலாவின் வகுப்பறையை இடிக்க முடிவு
பாம்பு கடித்து இறந்த மாணவியின் வகுப்பறையை இடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது
Recommended Video
கோழிக்கோடு: பாம்பு கடித்து இறந்த ஷகாலாவின் கிளாஸ் ரூம் சுவர் முழுக்க ஓட்டைகள், துவாரங்கள்.. பாதுகாப்பே இல்லாத அந்த வகுப்பறையை இடித்து தள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது!
கேரளா மாநிலம் கோழிக்கோடு அருகே சுல்தான்பத்தேரியை சேர்ந்தவர் வக்கீஸ் அப்துல் அஜிஸ். இவரது மகள் ஷகாலா. வயநாடு அருகே சுல்தான் பதேரியில் சர்வஜனா என்ற தனியார் மேல்நிலைப் பள்ளியில் ஷகாலா ஷெரின் 5-ம் வகுப்பு படித்து வந்தாள். இவளுக்கு 10 வயதாகிறது!
4 நாளைக்கு முன்பு கிளாசில் உட்கார்ந்திருந்த ஷகாலா.. சுவற்றில் இருந்த ஒரு ஓட்டைக்குள் விளையாட்டாக தனது காலை விட்டாள்.. அப்போதே ஏதோ நறுக்கென கடிக்கவும், காலை உடனே வெளியே எடுத்துவிட்டாள். ஆனால் காலில் அந்த இடத்தில் ரத்தம் வந்தது.. உடனே கிளாஸ் டீச்சரிடம் இதை சொல்ல, பள்ளி நிர்வாகம் பெற்றோருக்கு போன் செய்து விஷயத்தை தெரிவித்து, குழந்தையை சுல்தான் பத்தேரி தாலுகா அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

கோழிக்கோடு
ஆனால், ஷகாலா எதனால் மயங்கி விழுந்தாள், பாம்பு கடித்துதான் இறந்தாளா என்பதை டாக்டர்களால் உறுதி செய்ய முடியவில்லை. அதனால், கோழிக்கோடு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லுமாறு டாக்டர்கள் சொல்லவும், பெற்றோரும் மகளை அங்கு தூக்கி சென்றனர். ஆனால் அதற்குள் ஷகாலா இறந்துவிட்டாள். பாம்பு கடித்ததும், டாக்டர்கள் அதை உடனே கண்டுபிடித்து, அதற்கான சிகிச்சை தந்திருந்தால் குழந்தையை காப்பாற்றி இருக்கலாம் என்றும் குற்றஞ்சாட்டி போராட்டமும் நடந்தது.

வழக்கு பதிவு
இந்த சம்பவம் சோஷியல் மீடியாவிலும் வெளியாகி பெரும் பரபரப்பை தந்தது. பத்தேரி தாலுகா அரசு டாக்டர் ஜிஷாமெரின்ஜாய் இதை பற்றி சொல்லும்போது, ஆஸ்பத்திரியில் போதுமான மருந்து இல்லாததால்தான், ஷகாலாவுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை என விளக்கம் அளித்தார். இதையடுத்து அந்த பள்ளியின் முதல்வர் கருணாகரன், துணை முதல்வர் மோகனன், பத்தேரி அரசு ஆஸ்பத்திரி டாக்டர் ஜிஷாமெரின்ஜாய் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

விரிசல்கள்
மேலும் பத்தேரி சர்வஜன அரசு, சம்பந்தப்பட்ட பள்ளியை மாவட்ட நீதிபதி, அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போதுதான், அந்த ஷகாலாவின் கிளாஸ் ரூம் கட்டிடத்தில் ஒரு பாதுகாப்பும் இல்லாமல் இருந்தது தெரிந்தது. அந்த சுவரெல்லாம் ஓட்டைகள்.. விரிசல்களுமாக இருந்தன. ஒரு கிளாஸ் ரூமில் இத்தனை துவாரங்கள் இருப்பதா என்று அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், அந்த கட்டிடத்தை அகற்ற வேண்டும் என்று அறிக்கை அளித்தனர்.

புது கட்டிடம்
ஏனெனில், இந்த வகுப்பறை கட்டிடம் 30 வருஷத்துக்கு முன்பு கட்டப்பட்ட பழமையான கட்டிடமாம்.. அதனால் முழுமையாக இடித்துவிட நகர சபை முடிவு செய்துள்ளது. அரசின் நிதி ரூ.2 கோடி செலவில் புதிய கிளாஸ் ரூம் கட்டப்படும் என்றும், விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி தரப்பட்டுள்ளது. எனினும் ஷகாலாவின் மரணத்தில் இருந்து அப்பகுதி மக்கள் இன்னமும் மீளவே இல்லை.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications