வண்ணம் பாதி.. கவர்ச்சி மீதி.. கலங்க வைத்த சோபியா!

Subscribe to Oneindia Tamil

மும்பை: ஹோலி பண்டிகை வந்தாலும் வந்தது. அதை வைத்து போட்டோஷூட் எடுத்து பட்டையைக் கிளப்பி வருகின்றனர் பலரும். சோபியா ஹயத்தும் அதற்கு விதி விலக்கல்ல.

இங்கிலாந்தைச் சேர்ந்த மாடல் அழகி நடிகை சோபியா ஹயத். இவர் ஹோலியை முன்னிட்டு சிறப்பு போட்டோ ஷூட் நடத்தி கதி கலங்க வைத்துள்ளார் தனது கவர்ச்சி மூலம்.

மார்ச் 3ம் தேதி மும்பையில் இந்த போட்டோ ஷூட் நடத்தப்பட்டது. வெறும் பிகினியுடன் காணப்படும் சோபியா உடல் முழுக்க வண்ணப் பொடிகளைப் பூசி கவர்ச்சியை இலை மறை காய் மறையாக காட்டி பயமுறுத்தியுள்ளார்.

Sofia Hayat at hot Holi photoshoot

கலர் தண்ணீர் அடித்தும், கலர்ப் பொடிகளை மேலே பூசியும் விதம் விதமாக போஸ் கொடுத்துள்ளார். அந்த வண்ணங்களையம் மீறி சோபியாவின் கவர்ச்சி பிரதானமாக தெரிவதை மறைக்க முடியவில்லை.

செய்தியாளர்களிடம் இதுகுறித்து சோபியா கூறுகையில், நான் ஹோலியை கொண்டாடி வருகிறேன். இது கலர்களின் திருவிழா, சந்தோஷத்தின் திருவிழா. அனைவரும் ஹோலியை சந்தோஷமாக, உற்சாகமாக கொண்டாடுவோம் என்றார் சோபியா.

பயங்கர கவர்ச்சியான நடிகை என்று இவரை 2012ம் ஆண்டு வோக் இத்தாலியா இதழ் தேர்வு செய்து அறிவித்தது என்பது நினைவிருக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+