For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மேட்ரிமோனியல் வெப்சைட்டில் இப்படி ஒரு ஆபத்தா? பெங்களூர் சாப்ட்வேர் இன்ஜினியருக்கு நேர்ந்த சோகம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

பெங்களூர்: மேட்ரிமோனியல் வெப்சைட் மூலம் பழக்கமாகிய பெண்ணுடன் உறவு வைத்துவிட்டு பிறகு கொலையும் செய்ய முயன்ற சாப்ட்வேர் இன்ஜினியர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தாவை சேர்ந்தவர் சுபைன் பர்மன் (26). இவர் பெங்களூரில் ஒரு நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினயராக பணியாற்றி வந்தார்.

திருமண வரன் தேடும், மேட்ரிமோனியல் வெப்சைட் ஒன்றின் மூலம், கொல்கத்தாவை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியரான 26 வயது இளம் பெண்ணுக்கு வலை விரித்துள்ளார் சுபைன்.

ஒரே வீட்டில் கும்மாளம்

ஒரே வீட்டில் கும்மாளம்

இருவருமே சாப்ட்வேர் இன்ஜினியர்களாக இருப்பதால் வருமானத்திற்கு பிரச்சினையில்லை என நம்பிய அப்பெண்ணும், திருமணத்திற்கு சம்மதித்துள்ளார். இதன்பிறகு இருவரும் நேரில் சந்தித்து பழகியுள்ளனர். ஒரே வீட்டில் லிவ்விங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்துள்ளனர்.

கல்தா கொடுக்க முயற்சி

கல்தா கொடுக்க முயற்சி

திருமணம் செய்யும்படி அந்த பெண் வலியுறுத்தியதும், வேலை முடிந்த பிறகு ஏன் திருமணம் செய்ய வேண்டும் என்ற தொனியில் நடந்துகொண்டாராம் சுபைன்.

கொலை முயற்சி

கொலை முயற்சி

இதனால் இருவருக்கும் தகராறு அதிகரித்துள்ளது. ஒரு கட்டத்தில் தலையணையை வைத்து மூச்சை நிறுத்தி அந்த பெண்ணை கொலை செய்ய சுபைன் முயன்றுள்ளார்.

மேட்ரிமோனியல் வெப்சைட்

மேட்ரிமோனியல் வெப்சைட்

இதையடுத்து அந்த பெண் கொடுத்த புகாரின்பேரில் பெங்களூர், மாரத்தஹள்ளி போலீசார் சுபைனை கைது செய்துள்ளனர். பேஸ்புக் மூலமாகத்தான் பெண்களின் வாழ்க்கையை சீரழிக்கிறார்கள் என்ற புகார்கள் வருகிறதென்றால், இப்போது மேட்ரிமோனியல் வெப்சைட்டும் இதில் சேர்ந்துவிட்டது.

English summary
A software engineer was arrested for attempt to murder charge in Bengaluru.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X