அமர்நாத் யாத்ரீகர்கள் பாதையில் தீவிரவாதிகள் தாக்குதல்- 2 பேர் பலி - 3 பிணையாளிகளும் பத்திரமாக மீட்பு
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் எல்லைப் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தின் போது 3 பேரை தீவிரவாதிகள் சிறை பிடித்தனர். பின்னர் பிணையாளிகளே சமயோசிதமாக செயல்பட்டு மீண்டு விட்டனர்.
இந்தத் தாக்குதல் சம்பவம் ஜம்முவில் உள்ள உதம்பூருக்கு 10 கி.மீ தொலைவில் சம்ருலி என்ற இடத்தில் நடைபெற்றது. எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் தங்கள் வாகனங்களில் அணிவகுத்துச் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென அங்கு வந்த தீவிரவாதிகள் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

இந்தத் தாக்குதலில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் கொல்லப் பட்டார். மேலும் ஐந்து வீரர்கள் காயமடைந்தனர்.
மேலும் இந்தத் தாக்குதலின் போது 3 பேரை தீவிரவாதிகள் பிணையக் கைதிகளாக பிடித்துச் சென்றனர். இந்த நிலையில் பாதுகாப்புப் படையினர் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட நிலையில் பிணையாளிகளே சமயோசிதமாக செயல்பட்டு தீவிரவாதியையும் பிடித்ததோடு தாங்களும் உயிர் தப்பினர்.
இந்தத் தாக்குதல் சம்பவம் அமர்நாத் யாத்ரீகர்களைக் குறி வைத்து நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு அம்மாநில முதல் உமர் அப்துல்லா டிவிட்டரில் வேதனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘நீண்ட காலத்திற்குப் பிறகு தேசிய நெடுஞ்சாலையில் தாக்குதல் நடந்துள்ளது. இது கவலை தருகிறது. இந்தப் பகுதி தீவிரவாதிகளால் பாதிக்கப்படாத பகுதியாக இருந்து வந்தது' என்று கூறியுள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications