சோம்நாத் சட்டர்ஜி மருத்துவமனையில் அனுமதி! மூளைக்கு செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு!!

2004-2009ம் ஆண்டு லோக்சபா சபாநாயகராக இருந்தவர் சோம்நாத் சட்டர்ஜி. 2008ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்தின் போது காங்கிரஸ் அரசுக்கு கொடுத்து வந்த ஆதரவை மார்க்சிஸ்ட் கட்சி விலகி கொண்டது. ஆனால் சோம்நாத் சட்டர்ஜியோ தமது சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்துவிட்டார். இதனால் அவர் மார்க்சிஸ்ட் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
அப்போதே அடுத்து வரும் தேர்தல்களில் போட்டியிடாமல் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் சோம்நாத் சாட்டார்ஜி. 84 வயதாகும் அவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
அப்போது, அவரது உடலில் மூளைக்கு செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு இருப்பதை கண்டுபிடித்து அதை மருத்துவர்கள் அகற்றினர். இந்த நிலையில் நேற்று மாலை மீண்டும் அவரது உடல்நிலை மோசமடைந்தது.
உடனடியாக தனியார் தனியார் மருத்துவமனையில் அவசரசிகிச்சைப் பிரிவில் சோம்நாத் சட்டர்ஜி சேர்க்கப்பட்டார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தனியார் மருத்துவமனை நிர்வாகி பி. டாண்டன், சோம்நாத் சட்டர்ஜியின் உடலில் மூளைக்கு செல்லும் ரத்த குழாயில் மீண்டும் சிறிய அடைப்பு ஏற்படுள்ளது. அதை நீக்கியுள்ளோம். தற்போது அவர் உடல்நலன் சீராக இருக்கிறது என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications