குடும்பத்தையும், அரசியலையும் பேலன்ஸ் செய்யும் பிரபலங்கள்!சோனியா காந்தி டாப்!

Subscribe to Oneindia Tamil

மும்பை: பிரபலமான பெண்மணிகள் தங்களின் குடும்ப வாழ்க்கையும், பணியையும் எப்படி பேலன்ஸ் செய்து வெற்றி பெறுகிறார்கள் என்பது பலரது கேள்வி. அரசியலாகட்டும், விளையாட்டு, கார்ப்பரேட் துறை, சினிமா என பல துறைகளிலும் இவ்வாறு வெற்றி பெற்ற பெண்மணிகள் பலர் இருக்கின்றனர்.

இந்தியாவில் உள்ள பிரபல பெண்மணிகளில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அனைவரையும் கவர்ந்த தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

குடும்பத்தையும், அரசியல் வாழ்க்கையும் அவர் சரிசமமாக பேலன்ஸ் செய்யும் பிரபல பெண்மணிகள் பற்றி நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் இது தெரியவந்துள்ளது.

இந்தியா முழுவதும் 5100 பெண்களிடம் இது தொடர்பாக கருத்துக் கணிப்பு நடைபெற்றது. திருமணத் தகவல் இணையத்தளம் பிரபல பெண்மணிகள் பற்றி கேள்வி கேட்டது. அதில் சுவாரஸ்யமான தகவல்கள் தெரியவந்தன.

சோனியா நம்பர் 1

சோனியா நம்பர் 1

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 36.2 சதவிகித வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். இவர் குடும்பத்தையும், அரசியலையும் பேலன்ஸ் செய்து வருகிறார் என கருத்துக்கணிப்பில் பங்கேற்ற பெண்கள் தெரிவித்துள்ளனர்.

சுஷ்மா ஸ்வராஜ்

சுஷ்மா ஸ்வராஜ்

பாஜக தலைவர் சுஸ்மா ஸ்வராஜ்க்கு 33.6 சதவிகித பெண்கள் வாக்களித்துள்ளனர். இவருக்கு இரண்டாம் இடம் அளிக்கப்பட்டுள்ளது.

நீடா அம்பானி

நீடா அம்பானி

கார்ப்பரேட் துறையைச் சேர்ந்த பிரபல பெண்மணிகளில் நீடா அம்பாணிக்கு 35.6 சதவிகித வாக்குகள் கிடைத்துள்ளன. அவரைத் தொடர்ந்து கிரண் மசூம்தர், ஐசிஐசிஐ வங்கியின் சாந்தா கோச்சர், ஆக்சிஸ் வங்கியின் ஷிகா ஷர்மா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

மேரி கோம்

மேரி கோம்

விளையாட்டுத் துறையில் குத்துச்சண்டை வீராங்கனை மேரி முதலிடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து சானியா நெய்வால், சானியா மிர்சா, பி.வி.சிந்து ஆகியோரை பெண்கள் தேர்வு செய்துள்ளனர்.

கௌரி ஷாருக்கான்

கௌரி ஷாருக்கான்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மனைவி கௌரி ஷாருக்கானுக்கு முதலிடம் கொடுத்துள்ளனர் பெண்கள். அவரைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ராய், மாதுரி தீட்ஷித், கஜோல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+