சோனியா காந்தி இப்போ எங்கே இருக்கிறார் தெரியுமா? வைரலான போட்டோ!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பனாஜி: சோனியாகாந்தி கோவாவில் ஓய்வெடுத்து வருகிறார். அவர் சைக்கிள் ஓட்டும் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த சோனியா காந்தி அடிக்கடி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வந்தார். இதன்காரணமாக அடிக்கடி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் அரசியலில் இருந்து ஓய்வுபெற விரும்பிய அவர் தனது மகன் ராகுல்காந்தியை அண்மையில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமித்தார்.

கோவாவில் சோனியாகாந்தி

கோவாவில் சோனியாகாந்தி

இதைதொடர்ந்து ஓய்வெடுக்க விரும்பிய அவர், கோவா சென்றுள்ளார். அங்குள்ள லீலா ஹோட்டல் ரிசார்ட்டில் தனது நெருங்கிய தோழிகளுடன் அவர் நாட்களை கழித்து வருகிறார்.

சைக்கில், செல்பி, சோனியா

சைக்கில், செல்பி, சோனியா

இயற்கை அழகு மற்றும் சுற்றுலாப் பயணிகள் நிறைந்த கோவாவின் பல பகுதிகளில் அவர் சைக்கிளில் வலம் வருகிறார். அப்போது அவரை அடையாளும் காணும் தொண்டர்களின் விருப்பத்திற்கேற்ப புகைப்படங்களும் எடுத்துக்கொள்கிறார்.

மசால் தோசை..

மசால் தோசை..

மேலும் சுற்றுலாப் பயணிகளிடமும் சோனியா காந்தி கலந்துரையாடி வருகிறார். ரிசார்ட்டில் சோனியாகாந்தி மசால் தோசையை விரும்பி சாப்பிட்டு வருகிறாம். தனக்கான மசால் தோசை ரெடியாகும் வரை பொறுமையாக டைனிங் டேபிளில் காத்திருக்கிறாம் சோனியா.

உல்டாவாக சோனியா

உல்டாவாக சோனியா

வழக்கமாக ராகுல்காந்திதான் வெளிநாடுகளுக்கு ஓய்வெடுக்க செல்வார். அவர் தலைவரான பிறகு அவரது தாயார் உல்டாவாக கோவாவில் ஓய்வெடுத்து வருகிறார். கடந்த 26ஆம் தேதி கோவா சென்ற சோனியாகாந்தி ஜனவரி முதல் வாரத்தில் டெல்லி திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கான் மார்கெட்டில் ஷாப்பிங்

கான் மார்கெட்டில் ஷாப்பிங்

நீண்ட ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த சோனியா காந்தி மகன் ராகுல் தலைவரான பிறகு ரிலாக்ஸாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளாராம்.

ராகுல் தலைவராக பொறுப்பேற்ற அன்றே மகள் பிரியங்காவுடன் கான் மார்கெட் பகுதியில் உள்ள ஆர்சீஸ் கேலரியில் கார்டுஸ் மற்றும் ஸ்டேஷனரி பொருட்களை வாங்கினார்.

காற்று மாசு ஏற்பட்டபோது..

காற்று மாசு ஏற்பட்டபோது..

சோனியாகாந்தி கோவா லீலா ரிசார்ட்டில் விடுமுறையை கழிப்பது இது முதல் முறையல்ல. அண்மையில் டெல்லியில் கடுமையான காற்று மாசு ஏற்பட்ட போதுகூட மருத்துவர்கள் ஆலோசனைப்படி டெல்லியில் இருந்து வெளியேறி கோவாவில் சில வாரங்கள் தங்கியிருந்தார்.

செய்திகளில் இருந்தும் விலகல்

தற்போது தனது தோழிகளுடன் கோவா ரிசார்ட்டில் உள்ள சோனியா, புத்தகங்களை படிப்பது யோகா செய்வது என்றும் நேரத்தை கழித்து வருகிறார். மேலும் செய்திகளை பார்ப்பதில் இருந்தும் சோனியா விலகியுள்ளாராம்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! தமிழ் மேட்ரிமோனி

English summary
Sonia gandhi relaxing this year end at the Leela hotel in south Goa. Sonia left for Goa on December 26, and is expected to be back in the first week of January.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற