மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றார் சோனியா காந்தி!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி மருத்துவ பரிசோதனைக்காக நேற்று அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மருத்துவ பரிசோதனைக்காக அடிக்கடி அமெரிக்கா சென்று வந்தார். பீகார் சட்டமன்ற தேர்தல் சமீபத்தில் நடந்ததால் கடந்த 2 மாதங்களாக அவரால் பரிசோதனைக்கு அமெரிக்கா செல்ல முடியவில்லை.

இந்த நிலையில் அவர் நேற்று அமெரிக்கா புறப்பட்டு சென்றார். வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அவர் அமெரிக்கா சென்றிருப்பதாக, கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தெரிவித்தார்.
ஒரு வார காலம் அமெரிக்காவில் தங்கியிருந்து மருத்துவ பரிசோதனைகள் அனைத்தையும் முடித்து விட்டு, ஒரு வாரத்துக்குப்பின் சோனியா நாடு திரும்புவார் என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications