நாட்டின் சிறந்த அரசியல் தலைவர் கருணாநிதி... சோனியாகாந்தி புகழாரம்!
94வது பிறந்தநாள் மற்றும் வைர விழா கொண்டாடும் திமுக தலைவர் கருணாநிதிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி கடிதம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்
டெல்லி: நாட்டின் சிறந்த தலைவர் கருணநிதி என காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அரசியலில் முக்கிய பங்காற்றுபவர் கருணாநிதி என சோனியா காந்தி புகழாரம் சூட்டியுள்ளார்.
திமுக .தலைவர் கருணாநிதி எம்எல்ஏவாக சட்டசபையில் அடி எடுத்து வைத்து 60 ஆண்டுகள் நிறைவடைகிறது. அதோடு நாளை மாறுநாள் கருணாநிதி தனது 94வது பிறந்த நாளையும் கொண்டாடுகிறார்.
கருணாநிதியின் பிறந்தநாளையும் அவர் எம்எல்ஏவான 60 ஆண்டு விழாவான வைர விழாவையும் ஒன்றாக கொண்டாட அக்கட்சியினர் முடிவு செய்துள்ளனர். இதற்கான வைர விழா நாளை மறுநாள் ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் கொண்டாடப்படுகிறது.

தலைவர்கள் பங்கேற்பு
இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, லாலுபிரசாத் யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொய்தீன், காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.

சோனியா காந்தி வாழ்த்து
இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜூன் 3-ம் தேதி திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு கடிதம் மூலம் சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சிறந்த அரசியல் தலைவர்
நாட்டின் சிறந்த அரசியல் தலைவர் கருணாநிதி என்று சோனியா காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அரசியலில் முக்கிய பங்காற்றுபவர் கருணாநிதி என்று கூறியுள்ளார்.

தமிழக வளர்ச்சிக்காக பணியாற்றியவர்
தமிழக வளர்ச்சிக்காக பணியாற்றியவர் என்றும் சோனியா காந்தி தனது வாழ்த்து கடிதத்தில் தெரிவித்துள்ளார். பலமுறை காங்கிரஸ் கட்சிக்கு கருணாநிதி ஆதரவளித்திருப்பதை குறிப்பிட்டு சோனியா காந்தி இதனை தெரிவித்தள்ளார்.

48 ஆண்டுகள் வழிநடத்தியவர்
48 ஆண்டுகள் கட்சியை வழிநடத்தியவர் கருணாநிதி என்றும் சோனியா காந்தி கூறினார். கருணாநிதி ஆரோக்கியத்தோடு வாழ வேண்டும் என்றும் சோனியா காந்தி தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
-
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
கள்ளக்குறிச்சி, பெரியகுளம் உள்பட விசிக போட்டியிடும் 8 தொகுதிகள் எவை! வெளியானது பட்டியல் -
170... திமுக மாஸ்டர் பீஸ் தலைகீழா போகுதா? கியரை மாற்றிய அதிமுக! லட்டு மாதிரி கையில் முத்தரையர் ஓட்டு -
திவ்யா சத்யராஜ், வைஷ்ணவி, ராஜீவ் காந்தி, கனிமொழி, போஸ் வெங்கட்டுக்கு சீட் ஏன் கிடைக்கவில்லை? -
திமுகவையும் விடாத பிரேமலதா.. 3 சிட்டிங் எம்எல்ஏக்களை கைவிட ஸ்டாலினுக்கு அழுத்தம்.. புது தலைவலி -
விசிகவுக்கு திருப்போரூர், பெரியகுளம் உள்பட 8 தொகுதிகள்! உத்தேச பட்டியல் வெளியீடு! -
"ஆபாசமாக பேசி மிரட்டல் விடுக்கும் விர்ச்சுவல் வாரியர்ஸ்".. விஜய் மீது ரஞ்சனா நாச்சியார் புகார்! -
“ரெஸ்ட்டா? எனக்கா?” 13வது முறையாக தேர்தலில் களமிறங்கும் துரைமுருகன்.. மீண்டும் காட்பாடியில் போட்டி! -
விஜய் பிரசாரத்தை முடக்கவே சாலையில் பள்ளம் தோண்டப்பட்டதா? என்ன நடந்தது தெரியுமா? மாநகராட்சி விளக்கம் -
என்னங்க சொல்றீங்க? அப்போ எல்லா கணக்கும் தப்பா போகுதா? ஷாக்கான விஜய்.. காரணமான அந்த ரிப்போர்ட் -
திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட்












Click it and Unblock the Notifications