நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்... கைகோர்த்த ராகுல், சோனியா!
எதிர்க்கட்சிகள் விவாதம் கோரும் விஷயங்களை மத்திய அரசு தட்டிக்கழிப்பதை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்
டெல்லி : விவசாயிகள் பிரச்னை, ஆந்திரா சிறப்பு அந்தஸ்து, எஸ்சி எஸ்டி சட்டம் உள்ளிட்ட விவகாரங்களில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் இதற்கு மத்திய அரசு பிடி கொடுக்காத நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ராகுல்காந்தி, சோனியா காந்தி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
நாடாளுமன்றத்தில் 2-ம் கட்ட பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மார்ச் 5-ந்தேதி தொடங்கியது.இந்தக் கூட்டத் தொடர் முதலே கடும் கூச்சலும் குழப்பமும் நிலவி வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அதிமுக, திமுக எம்.பி.க்கள் இரு சபைகளிலும் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு சபையை முடக்கி வருகின்றனர். நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் இவர்களின் போராட்டம் 20 நாட்களைக் கடந்து நடைபெற்று வருகிறது.

ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி தெலுங்குதேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது. ஆனால் சபை தொடர்ந்து செயல்படாததால் நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்திற்கு எடுத்தக் கொள்ளப்படவே இல்லை. எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக லோக்சபா, ராஜ்யசபா தொடர்ந்து 20 நாட்களாக முடங்கி வருகிறது.

இந்நிலையில் இன்று நாடாளுமன்றம் வளாகம் அருகே வங்கி முறைக்கேடு, விவசாயிகள் பிரச்சனை, நம்பிக்கையில்லா தீர்மானம், எஸ்.சி. எஸ்.டி சட்டம், ஏர் இந்தியாவில் பங்குகள் விலக்கல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி. ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications