ராஜீவ் காந்தி நினைவு தினம்: வீர் பூமியில் சோனியா, ராகுல், பிரியங்கா அஞ்சலி
டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தையொட்டி அவரது சமாதியான வீர் பூமியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்காவுடன் அஞ்சலி செலுத்தினார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 24வது நினைவு தினம் இன்று. இதையொட்டி அவரின் மனைவியும் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சோனியா காந்தி டெல்லியில் உள்ள அவரது சமாதியான வீர் பூமியில் இன்று காலை அஞ்சலி செலுத்தினார். மேலும் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி, அவரது சகோதரி பிரியங்கா வாத்ரா ஆகியோர் தங்கள் தந்தை ராஜீவின் சமாதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வாத்ராவும் மாமனாரின் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தினார். காங்கிரஸ் தலைவர்கள் அஜய் மகேன், பி.சி. சாக்கோ ஆகியோரும் ராஜீவுக்கு அஞ்சலி செலுத்தினர்.
1991ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட ராஜீவ் காந்தி தற்கொலைப்படை தாக்குதலில் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications