அஸ்ஸாம் முதல்வர் கோகாய் ராஜினாமாவை நிராகரித்தார் சோனியா
Subscribe to Oneindia Tamil
டெல்லி: லோக்சபா தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று அஸ்ஸாம் முதல்வர் கோகாய் ராஜினாமா செய்ய முன்வந்ததை காங்கிரஸ் தலைவர் சோனியா நிராகரித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் அஸ்ஸாம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 14 தொகுதிகளில் 3 தொகுதிகளை மட்டுமே காங்கிரஸ் கைப்பற்றியது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று, அம்மாநில முதல்வர் தருண் கோகாய், தனது பதவியை ராஜினாமா செய்ய முன்வந்தார்.

தன் ஆதரவாளர்களுடன் டெல்லிக்கு சென்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும், துணைத்தலைவர் ராகுல் காந்தியையும் அவர் சந்தித்தார்.
தனது ராஜினாமா விருப்பத்தை அவர் தெரிவித்தபோது, அதை சோனியா நிராகரித்து விட்டதாக அம்மாநில அமைச்சர் நிலோமனி சென் தேகா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications