பாஜகவிற்கு எதிராகப் பிரசாரம் செய்வதால் இந்து அமைப்புகளால் நான் கொல்லப்படலாம் : பிரகாஷ்ராஜ் பகீர்
பாஜகவிற்கு எதிராகப் பிரசாரம் செய்வதால் இந்து அமைப்புகளால் நான் கொல்லப்படலாம் என்று பிரகாஷ்ராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.
பெங்களூரு : பாஜக மற்றும் இந்து அமைப்புகளுக்கு எதிராகத் தொடர்ந்து பேசி பிரசாரம் செய்து வருவதால், தன்னை கொல்ல சதி நடப்பதாக நடிகர் பிரகாஷ் ராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.
நடிகர் பிரகாஷ்ராஜ் கடந்த சில மாதங்களாக பாஜக மற்றும் இந்து அமைப்புகளுக்கு எதிராக தொடர்ந்து பேசி வருகிறார். பெங்களூருவில் எழுத்தாளர் கெளரி லங்கேஷ் மற்றும் கல்புர்கி ஆகியோர் இந்து அமைப்புகளுக்கு எதிராக கருத்துகளைத் தெரிவித்ததால், கொலை செய்யப்பட்டதற்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பே காரணம் என்றும் அவர் குற்றஞ்சாட்டிவருகிறார்.

இந்நிலையில், பெங்களூருவில் பிரகாஷ்ராஜ் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, நான் பாஜக மற்றும் இந்து அமைப்புகளுக்கு எதிராக இயங்கி வருவதால், என்னை கொல்ல சதி நடக்கிறது.
சில இந்து அமைப்புகள் எனக்கு நேரடியாகவே கொலை மிரட்டல் விடுத்துள்ளன. இதனால், தான் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் கொலை செய்யப்படலாம். ஆனால், தான் அதற்கு அஞ்சவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பிரதமர் மோடிக்கு நாட்டை சரியாக ஆட்சி செய்யத் தெரியவில்லை. நாட்டில் தேவையில்லாத குழப்பங்கள் உண்டாக்கி அதன் மூலம் ஆதாயத்தை தேட நினைக்கிறார்கள். இதனால், மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.
கர்நாடக சட்டசபைத் தேர்தலில் மதவாத கட்சிகளுக்கும், வன்முறையைத் தூண்டும் கட்சிகளுக்கும் வாக்களிக்காமல், மக்கள் ஆராய்ந்து பார்த்து வாக்களிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
-
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை












Click it and Unblock the Notifications