பாட்னாவில் குண்டு வெடித்ததை ‘பட்டாசு’ என நினைத்த தொண்டர்கள்
பாட்னா: பாட்னாவில் மோடியின் பேச்சைக் கேட்பதற்காக திரண்டிருந்த பொதுமக்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் அடுத்தடுத்து வெடித்த குண்டுகளை பட்டாசு வெடித்ததாக நினைத்துள்ளனர்.
நேற்று, பாட்னா காந்தி மைதானத்தில் சுமார் 2 லட்சம் தொண்டர்கள் பாஜகவின் பிரதம வேட்பாளரும், குஜராத்தின் முதல்வருமான நரேந்திர மோடியின் பேச்சைக் கேட்பதற்காகத் திரண்டிருந்தனர்.
பொதுக்கூட்ட மேடைக்கு மோடி மற்றும் தலைவர்கள் வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக அடுத்தடுத்து வெடித்த 2 குண்டுகளின் சத்தத்தை பட்டாசு சத்தம் என நினைத்ததாக சம்பவ இடத்திற்கு அருகில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

வெடி குண்டுகளின் சத்தம் தீபாவளி பட்டாசு வெடிப்பது போன்று இருந்ததாகவும், இதனால் தலைவர்களை வரவேற்க பட்டாசுகள் வெடிக்கப்படுவதாகவும் அவர்கள் நினைத்துள்ளனர்
அதனால்தான் மைதானத்துக்குள்ளேயும் வெளியேயும் 11.40 மணிக்கு தொடங்கி 12.25 மணி வரை சுமார் முக்கால் மணி நேரம் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தபோதும் தொண்டர்கள் அஞ்சி ஓட எத்தனிக்கவில்லை. ஒருவேளை அவ்வாறு நேர்ந்திருந்தால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகமாகி இருந்திருக்கும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications