ரிலீஸாக போறார்னு கொளுத்தி போட்டது யார்.. விடுதலை நாளுக்காக நிஜமாகவே ஆசைப்படும் சசிகலா!
Recommended Video
சென்னை: வடிவேலு ஒரு படத்துல சொல்லுவாரே, "நான் பாட்டுக்கு செவனேன்னுதானே கிடந்தேன்.. கவுரவம்.. கவுரவம்னு சொல்லி ஏன் இப்படி பண்ணிட்டீங்க" என்பதை போலவே சசிகலா ரிலீஸ் சம்பவமும் நாலாபக்கமும் பரவி, கடைசியில் அப்படி எதுவுமே இல்லாமல் போய்விட்டது!
பெங்களூரூ பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலா, முன்கூட்டியே விடுதலை ஆவார் என தகவல்கள் சில தினங்களுக்கு முன்பு வெளியாயின. நன்னடத்தை காரணமாக அவர் ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளது என்ற கூடுதல் தகவலும் வந்தது. இதனால் அரசியல் வட்டாரம் பரபரத்தது.
இதற்கு காரணம், தமிழகத்தில் இரட்டை தலைமை என்ற விவகாரத்தை ராஜன் செல்லப்பா கொளுத்தி போட, அதிமுக களமே ஜிகுஜிகுவென தகிக்க ஆரம்பித்தது.

விடுதலையா?
இந்த சமயத்தில்தான் சசிகலா ரிலீஸ் விஷயம் கசிந்தது. இந்த ரிலீசுக்கு பின்னால் அரசியல் இருப்பதாகவே பார்க்கப்பட்டது. அதிமுகவால் கட்சியை ஒருங்கிணைத்து அரவணைத்து நடத்தி செல்ல முடியவில்லை என்றும், ஒற்றை தலைமையை கொண்டுவர சசிகலாவால் மட்டுமே பாஜக நம்புவதாகவும் சொல்லப்பட்டது. அதனால்தான் ரிலீஸ் விஷயத்தில் ஆர்வம் காட்டுவதாகவும், அதுவரை இப்போது உள்ள இரட்டை தலைமையே தொடரட்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் கூட சொல்லப்பட்டது.

முற்றுப்புள்ளி
எனினும், துறை ரீதியாக இது பற்றி சிறைத்துறை முன்னாள் டிஐஜி ரூபா, "நல்லெண்ண அடிப்படையில் சிறைக்கைதிகளை விடுவிக்க நிறைய விதிகள் இருக்கின்றன. ஆனால், இந்த வழக்கை பொறுத்தவரை, முன் கூட்டியே சசிகலா விடுதலை என்பது குறித்த கேள்வியே எழவில்லை" என்று சொல்லி ரிலீஸ் என்ற பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

நொந்து போயுள்ளார்
விதிப்படி இப்படி ஒரு விஷயமே நடக்காது என்றால், விடுதலை என்ற விஷயத்தை கொளுத்தி போட்டது யார் என்றுதான் சசிகலா டென்ஷன் ஆகிவிட்டாராம். ஏற்கனவே தேர்தல் தோல்வியில் நொந்து போய் கிடந்தவர், ரிலீஸ் என்ற விஷயத்தை யாரோ கிளப்பிவிட, இன்னமும் கொதித்து போய்விட்டாராம்.

விருப்பம்
இந்த வேலையெல்லாம் செய்தது அனேகமாக திமுகவாகதான் இருக்கும், அதனால் அவர்கள் பரப்பிய வதந்தியை ஏன் ஊர்ஜிதப்படுத்தக்கூடாது என்று யோசிக்கிறாராம். அதாவது, ரிலீஸ் ஆகி வெளியே போனால்தான் என்ன? என்ற கேள்வி சசிகலா மனசில் எழுந்துள்ளதாம்.

சிறைவிதி
ரிலீஸ் ஆக வேண்டும் என்ற ஆசை சசிகலாவுக்கு இப்போது மிக தீவிரமாக எழுந்துள்ளதால், அதற்கான அடுத்த முயற்சிகளில் இறங்கி உள்ளாராம். சிறைவிதி என்பதையும் தாண்டி, இந்த ரிலீஸ் மேட்டரில் பாஜக உள்ளே நுழையுமா, அல்லது சசிகலா ஆசைப்பட்டதும் நிராசையாகிவிடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்?












Click it and Unblock the Notifications