தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஜடேஜாவுக்கு வாய்ப்பு
மும்பை: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக மீதமுள்ள 2 ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியும், முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்குமான அணியும் பிசிசிஐ தேர்வுக்குழுவால் இன்று அறிவிக்கப்பட்டது. டெஸ்ட் அணியில் ரவீந்திர ஜடேஜா மற்றும் காயத்தால் அவதிப்பட்ட அஸ்வின் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்திய ஒருநாள் அணி விவரம்: டோணி, ரோஹித் ஷர்மா, தவான், ரஹானே, விராட் கோஹ்லி, ரெய்னா, அக்சர் படேல், ஹர்பஜன் சிங், அமித் மிஸ்ரா, மோஹித் சர்மா, புவனேஷ் குமார், ஸ்ரீநாத் அரவிந்த், ஸ்டூவர்ட் பின்னி, அம்பாத்தி ராயுடு, குர்கீரத் சிங் மான்.

தற்போதுள்ள அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஸ்ரீநாத் அரவிந்த் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி விவரம்:
தவான், முரளி விஜய், விராட் கோஹ்லி (கேப்டன்), ரஹானே, புஜாரா, ரோஹித் ஷர்மா, கே.எல்.ராகுல், விருத்திமான் சாஹா, இஷாந்த் ஷர்மா, வருண் ஆரோன், அஸ்வின், அமித் மிஸ்ரா, ஜடேஜா, ஸ்டூவர்ட் பின்னி, புவனேஷ் குமார், உமேஷ் யாதவ். இந்த அணியில் ஹர்பஜன்சிங், நமன் ஓஜா, கருண் நாயர் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெறும் 2 நாள் பயிற்சி ஆட்டத்துக்கான வாரியத் தலைவர் அணி விவரம்:
புஜாரா, கே.எல்.ராகுல், உன்முக்த் சந்த், கருண் நாயர், ஸ்ரேயாஸ் ஐயர், நமன் ஓஜா, ஹர்திக் பாண்டியா, ஜயந்த் யாதவ், குல்தீப் யாதவ். ஷர்துல் தாக்கூர், நாது சிங், கரண் ஷர்மா, ஷெல்டன் ஜாக்சன்.
நவம்பர் 5ம் தேதி டெஸ்ட் தொடர் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications