தென்மேற்கு பருவ மழை அந்தமானில் தொடங்கியது: தமிழகத்தில் வெப்பம் குறைய வாய்ப்பு
அந்தமான்: அந்தமான் தீவுப் பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை கடந்த சில தினங்களுக்கு முன் தொடங்கியுள்ளது. தீவுகள் முழுவதும் மழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் வெப்பத்தின் அளவு குறைய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள் கூறியதாவது:-
தென்வங்க கடலில் சில பகுதிகளிலும், அந்தமான் கடல் பகுதிகளிலும் தென்மேற்கு பருவமழை சனிக்கிழமை தொடங்கியது. இந்த மழை முன்னேற்றம் அடைந்து அந்தமான் முழுவதும் பரவியுள்ளது.
இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் தெற்கு மற்றும் கிழக்கு வங்க கடலில் சில பகுதிகளிலும், எஞ்சியுள்ள அந்தமான் கடல் மற்றும் அந்தமான் தீவுகளிலும் பரவலாக மழை பெய்யும். அந்தமான் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படும்.

தமிழகத்தில் மழை
வெப்பசலனத்தினால் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக ஓசூரில் 2 சென்டி மீட்டர் மழை பெய்தது.

24 மணிநேரத்திற்கு மழை
தேன்கனிக்கோட்டை, ஓமலூரில் தலா 2 சென்டி மீட்டர், சூளகிரி, போச்சம்பள்ளி, வேப்பந்தட்டை, வாழப்பாடி, மங்களாபுரம் ஆகிய பகுதிகளில் தலா 1 சென்டி மீட்டர் அளவில் மழை பெய்துள்ளது. தொடர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

அக்னி நட்சத்திரம்
இம்மாத தொடக்கத்தில் அரபிக்கடலில் தீவிர காற்றழுத்த பகுதி மையம் கொண்டிருந்ததால் தமிழ்நாடு, புதுச்சேரியில் மழை பெய்தது. இதனால் கடந்த 4-ந்தேதி கத்திரி வெயில் என்ற அக்னிநட்சத்திரம் தொடங்கியும் வெப்பத்தின் அளவு குறைந்து காணப்பட்டது.

வெயிலின் தாக்கம்
அக்னிநட்சத்திரம் தொடங்கி முதல் பாதியான 12 நாட்கள் வெப்பத்தின் அளவு அதிகரிப்பதும், பிற்பாதியான 12 நாட்கள் வெப்பத்தின் அளவு குறைவதும் வழக்கம். அந்தவகையில் நடப்பாண்டு அக்னிநட்சத்திரம் தொடங்கி முதல் பாதியான 12 நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் வெப்பத்தின் அளவு குறைந்தே காணப்பட்டது.

வெயிலே தெரியாதாம்
அக்னி நட்சத்திரம் முடிய 9 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் பருவ நிலையிலும் சில மாற்றங்கள் காணப்படுவதால் வெயிலின் தாக்கம் அதிகம் இல்லாமல் வெப்பத்தின் அளவு படிப்படியாக குறைந்து, இதமான வெயில் அடிக்க வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications