ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தொடர்புடைய நிறுவனங்களுக்கு நீதிமன்றம் அபராதம்
பெங்களூர்: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து, விடுவிக்ககோரி மனு தாக்கல் செய்த 5 நிறுவனங்களுக்கும் கடும் கண்டனத்தை தெரிவித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி, ஜான் மைக்கேல் குன்ஹா அவற்றுக்கு தலா ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்தார்.

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. சொத்து குவிப்பு வழக்கில் 38 தனியார் நிறுவனங்களும் இணைக்கப்பட்டுள்ளன. அதிலிருந்து தங்களை விடுவிக்க கோரி லெக்ஸ் பிராப்பர்டீஸ் உள்ளிட்ட 5 நிறுவனங்கள் மனு தாக்கல் செய்தன. இம்மனுக்கள் மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், புதன்கிழமை மாலை தீர்ப்பு வழங்கப்படும் என்று பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா தெரிவித்திருந்தார்.
அதன்படி இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா, லெக்ஸ் நிறுவனம் உள்ளிட்ட 5 நிறுவனங்கள் மனுக்களும் தள்ளுபடி செய்வதாக தெரிவித்தார். அந்த 5 நிறுவனங்களுக்கும் தலா ரூபாய் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிப்பதாகவும் உத்தரவிட்டார். வழக்கை இழுத்தடிக்கவே இதுபோன்ற மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் 5 நிறுவனங்களுக்கும் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.












Click it and Unblock the Notifications