ஹெலிகாப்டரில் போகலாம் வாங்க; ஏன் வெயிட் பண்றீங்க; ஸ்பெஷல் கவனிப்பால் திக்குமுக்காடிய அப்பாவு!

Subscribe to Oneindia Tamil

சிம்லா: சிம்லாவில் நடைபெற்று வரும் சபாநாயகர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்ற அப்பாவுவுக்கு, அங்கு கிடைத்த ராஜமரியாதை அவரையே திக்குமுக்காட வைத்துவிட்டதாம்.

இந்தியாவின் வேறு எந்த மாநில சபாநாயகர்களுக்கும் கிடைக்காத மரியாதையும், வரவேற்பும் தமிழகத்திலிருந்து சென்ற அப்பாவுவுக்கு மட்டும் கிடைத்திருக்கிறது.

சண்டிகரிலிருந்து சிம்லாவுக்கு காரில் பயணிக்க வேண்டாம் எனக் கூறி நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா தனது ஸ்பெஷல் ஹெலிகாப்டரில் அப்பாவுவையும் அழைத்துச்சென்றிருக்கிறார்.

 குளு குளு சிம்லா

குளு குளு சிம்லா

ஹிமாச்சல் பிரதேசம் மாநிலம் சிம்லாவில் நடைபெற்று வரும் சபாநாயகர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக நேற்று முன் தினம் மதுரையிலிருந்து டெல்லிக்கு விமானத்தில் சென்ற சபாநாயகர் அப்பாவு, அங்கு ஏதேச்சையாக நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லாவை பார்த்திருக்கிறார். வி.ஐ.பி.க்கள் லாஞ்சில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் அப்பாவு நெல்லை மொழிநடையில் ஆங்கிலத்தில் பேசியது ஓம் பிர்லாவை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

ஸ்பெஷல் கவனிப்பு

ஸ்பெஷல் கவனிப்பு

பின்னர் டெல்லியிலிருந்து சண்டிகருக்கு நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லாவுடன் விமானத்தில் ஒன்றாக பயணித்த அப்பாவு, அப்போதும் பல்வேறு உலக நடப்புகள் பற்றி விரிவாக பேசியிருக்கிறார். இந்நிலையில் சண்டிகர் விமான நிலையத்திலிருந்து சிம்லாவுக்கு செல்ல ஓம் பிர்லாவுக்கு பிரத்யேக ஹெலிகாப்டர் தயார் நிலையில் இருந்தது. அப்பாவுவை பிக் அப் செய்ய சிம்லா அரசு கார் அனுப்பியிருந்தது. அப்பாவு காருக்காக காத்திருந்ததை பார்த்த ஓம் பிர்லா, ''நீங்க ஏன் வெயிட் பண்றீங்க, வாங்க என் கூட ஹெலிகாப்டரில் போகலாம்'' என அப்பாவுவையும் உடன் அழைத்துச் சென்றிருக்கிறார்.

முக்கியத்துவம்

முக்கியத்துவம்

ராஜஸ்தான் சபாநாயகர், நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா, தமிழக சபாநாயகர் அப்பாவு ஆகிய மூவர் மட்டும் ஸ்பெஷல் ஹெலிகாப்டரில் சிம்லா சென்றடைந்தார்கள். அறிமுகமாகிய 2 மணி நேரத்தில் ஒரு மாநில சபாநாயகருக்கு நாடாளுமன்ற சபாநாயகர் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் என்றால் நிச்சயம் அது அப்பாவுவின் பேச்சாற்றலுக்கும், அறிவுக்கூர்மைக்கும் கிடைத்த மரியாதையாக தான் இருக்கும் எனக் கருதப்படுகிறது.

 சபாநாயகர்கள் மாநாடு

சபாநாயகர்கள் மாநாடு

நேற்று சபாநாயகர்கள் நிலைக்குழு கூட்டம் நடைபெற்ற நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு பிரதமர் மோடி அகில இந்திய சபாநாயகர்கள் மாநாட்டை தொடங்கி வைக்கிறார். இந்த மாநாட்டின் தலைவராக நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே டெல்லிக்கு புறப்படுவதற்கு 4 மணி நேரத்துக்கு முன்பு வரை கூட தனது ராதாபுரம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சபாநாயகர் அப்பாவு மழை வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டது கவனிக்கத்தக்கது.

அடுத்த மாநாடு

அடுத்த மாநாடு

இந்தமுறை சிம்லாவில் சபாநாயகர்கள் மாநாடு நடைபெறும் நிலையில், அடுத்தமுறை இந்த மாநாட்டை எங்கு நடத்தலாம் என நேற்று விவாதிக்கப்பட்டிருக்கிறது. தென்மாநிலங்களில் நடத்துவதாக இருந்தால் தமிழகத்தில் அகில இந்திய சபாநாயகர்கள் மாநாடு நடைபெற அதிக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சபாநாயகர் அப்பாவுவுடன் சட்டமன்றச் செயலாளர் ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட 4 பேர் சிம்லாவுக்கு சென்றிருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+