ஒத்த ரன் எடுத்தாலும் கோஹ்லிக்கு பிறந்தநாள் வாழ்த்துச் சொல்ல தவறாத ரசிகர்கள்
மொகாலி: கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் ஒரு ரன் மட்டுமே எடுத்திருந்தாலும் ஸ்டேடியத்தில் கூடியிருந்த ரசிகர்கள் அவருக்கு உற்சாகமாக பிறந்தநாள் வாழ்த்து பாடல் பாடினர்.
இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மொகாலியில் உள்ள ஐ.எஸ். பந்த்ரா ஸ்டேடியத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. அன்றைய தினம் கிரிக்கெட் வீரர் கோஹ்லி தனது 27வது பிறந்தநாளை கொண்டாடினார்.

அவர் நேற்று பேட்டிங் செய்ய வந்தபோது ஸ்டேடியத்தில் இருந்த ரசிகர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அத்தகைய வரவேற்புக்கு இடையே மைதானத்திற்கு வந்த கோஹ்லி ஒரு ரன் எடுத்த நிலையில் அவுட்டானார்.
அவர் ஒரு ரன் மட்டுமே எடுத்து அவுட்டானதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இருப்பினும் அவர்கள் கோஹ்லிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க தவறவில்லை. ஸ்டேடியத்தில் உள்ள பெரிய திரையில் ரசிகர்களின் பிறந்தநாள் வாழ்த்துச் செய்திகள் காண்பிக்கப்பட்டது.
இந்தியாவின் வைரம் விராட் கோஹ்லிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என அன்ஷ் பன்சால் என்பவர் தெரிவித்த வாழ்த்துச் செய்தி பெரிய திரையில் காண்பிக்கப்பட்டது.
முன்னதாக இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் கோஹ்லிக்கு நேரிலும், ட்விட்டரிலும் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் உடை மாற்றும் அறையில் கோஹ்லிக்கு கேக் வெட்டி அவரது பிறந்நதாளை சக வீரர்கள் கொண்டாடியுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications