சமூக சீர்திருத்தவாதி நாராயண குரு 'இந்து துறவி'யா? பாஜகவுக்கு எதிராக கேரளாவில் கொந்தளிப்பு
திருவனந்தபுரம்: ஜாதி மற்றும் தீண்டாமை ஒழிப்பு சமூக சீர்திருத்தவாதியான நாராயண குருவை இந்துத் துறவி என்று பாஜக குறிப்பிட்டதால் கேரளாவில் சர்ச்சை வெடித்துள்ளது.
நாராயண குரு குறித்து "உலகிற்கு கேரளாவின் மிகப்பெரிய பங்களிப்பு இந்து சன்யாசி ஸ்ரீ நாராயணகுருவும் அவரது போதனைகளும்" என்று கேரளா பாஜகவின் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது.

இந்து மத சீர்திருத்தவாதி
இந்து சமய சட்டகங்களுக்குள் இருந்த படியே இந்து மதத்தை சீர்திருத்த நாராயண குரு பணியாற்றினார் என்றும், சாதியை மறுத்து தாழ்த்தப்பட்ட மற்றும் நலிவுற்ற பிரிவினரின் ஆன்மீக விடுதலை, சமூக சமத்துவம் மற்றும் முன்னேற்றத்த்திற்கு உண்டான சீர்த்திருத்த இயக்கத்தை தலைமையேற்று நடத்தியவர் ஸ்ரீ நாராயண குரு என்று கூறியுள்ளது அந்தப் பதிவு.
|
அவமதிப்பு
இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து கேரள காங்கிரஸ் கமிட்டி வி.எம்.சுதீரன் கூறுகையில், மரியாதைக்குரிய சமூக சீர்த்திருத்தவாதியான நாராயண குருவை ‘இந்து சன்யாசி'என்று கூறுவது அவருக்கு ஏற்படுத்திய அவமதிப்பாகும் என்றார்.
rn |
மதவாத அரசியல்
எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா, நாராயண குருவை இந்து சன்யாசி என்று கூறியதன் மூலம் காவிக்கட்சி தனது மத அரசியலை பரப்புகிறது என்று சாடினார். மதங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு சீர்திருத்தவாதியை இந்து சன்யாசி என்று அடையாளப்படுத்துவதன் மூலம் அவரையும் சங் பரிவாருக்குள் கொண்டு வர முயற்சி செய்யப்படுகிறது என சாடினார். இதேபோல் சமூக வலைதளங்களிலும் பாஜகவின் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ஜாதி, மதத்தை துறந்தவர்..
மூத்த பத்திரிகையாளர் சார்மி ஹரிகிருஷ்ணன் தம்முடைய ட்விட்டர் பக்கத்தில், ஜாதி வேண்டாம்... மதம் வேண்டாம் என்று பிரகடனம் செய்த மனிதாபிமானியை 'இந்து துறவி' என மாற்றிவிட முடியாது என சாடியுள்ளார்.

ஓணம் சர்ச்சை
ஏற்கெனவே ஓணம் பண்டிகையை வாமன ஜெயந்தி என பாஜக தலைவர் அமித்ஷா மாற்றி குறிப்பிட்டிருந்தார். இதற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
