For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோடியுடன் இலங்கை பிரதமர் ரணில் சந்திப்பு.. முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்து

ஐந்து நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்திய பிரதமர் மோடியை சந்தித்துள்ளார். இந்தப் பேச்சுவார்த்தையின் போது முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

டெல்லி: இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். அவர் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஐந்து நாள் பயணமாக இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று இந்தியா வந்தார். மாலை 5 மணியளவில் டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்திற்கு வந்த அவருக்கு இந்திய அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

Sri Lankan PM meets Modi

பிரதமர் ரணிலுடன் அவரது மனைவி மைத்ரி விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகளும் வந்துள்ளனர்.

மோடியுடன்..

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இலங்கைப் பிரதமர் ரணில் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தையின் போது பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

திருகோணமலை

இதுதவிர, திருகோணமலையில் இந்தியாவின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படவிருக்கும் துறைமுக வளர்ச்சித் திட்டங்கள் குறித்து இந்தப் பேச்சுவார்த்தையில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

புத்த ஜெயந்தி அழைப்பு

இதனைத் தொடர்ந்து, வரும் மே மாதம் 11, 12ஆம் தேதிகளில் இலங்கையில் நடைபெறும் புத்த ஜெயந்தி விழாவிற்கான அழைப்பை பிரதமர் மோடியிடம் ரணில் விக்கிரமசிங்க விடுத்தார். இதனைத் தொடர்ந்து மோடி இலங்கை செல்வதற்கான திட்டங்கள் வகுக்கப்பட உள்ளன.

சுஷ்மாவுடன்..

முன்னதாக, இலங்கைப் பிரதமர் ரணில், இந்திய வெளி விவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜை இன்று காலை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தையில் இலங்கை தமிழர் விவகாரம் மற்றும் தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு, படகுகள் மீட்பு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காங்கிரஸ் தலைவர்களுடன்...

இந்திய பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்களுடனான சந்திப்பிற்கு பின்னர், இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி ஆகியோரையும் சந்தித்து பேசினார்.

English summary
Sri Lankan PM Ranil Wickremesinghe has met PM Modi and Union Minister Sushma Swraj today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X