பதவியேற்ற பின் முதல் வெளிநாட்டு பயணம்! பிப்.15ல் இந்தியா வருகிறார் இலங்கை அதிபர் சிறிசேனா!
டெல்லி: நான்கு நாள் அரசு முறை பயணமாக இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா, வரும் 15ம் தேதி இந்தியா வருகிறார்.
இலங்கையின் அதிபராக பொறுப்பேற்ற பின் முதல் வெளிநாட்டு பயணமாக மைத்ரிபால சிறிசேனா இந்தியா வருகிறார். பிப்ரவரி 15ம் தேதி முதல் நான்கு நாட்கள் அவர் இந்தியாவில் தங்கியிருப்பார்.

தனது பயணத்தின் போது, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இரு தரப்பு உறவுகள், இலங்கையில் மேற்கொள்ள வேண்டிய மறு கட்டமைப்பு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இதர அரசியல் கட்சி தலைவர்களையும் சிறிசேனா சந்திக்க உள்ளார். இதைத் தொடர்ந்து புத்த கயா புத்தர் கோயில் மற்றும் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கும் சிறிசேனா செல்லவுள்ளார்.
ராஜபக்சேவின் ஆட்சிக்காலத்தில், இந்தியா-இலங்கை இடையிலான உறவு சீர்கெட்டிருந்தது. அதை சீர்படுத்துவதற்காக, சிறிசேனா வருகிறார். இந்தியாவுடன் நல்லுறவை விரும்புவதாக அவர் ஏற்கனவே கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.
சிறிசேனாவின் வருகையை ஆவலுடன் எதிர்நோக்குவதாக பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே கூறியுள்ளார். மேலும், நேற்று முன்தினம் கொண்டாடப்பட்ட இலங்கை சுதந்திர தினத்துக்கும் வாழ்த்து செய்தி அனுப்பி வைத்துள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications