ஸ்ரீ ஸ்ரீ பற்றி ஜோக் போட்ட நடிகர் அக்ஷய் குமாரின் மனைவியுடன் மல்லுக்கட்டிய ஆதரவாளர்கள்
மும்பை: பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரின் மனைவியும், நடிகையுமான ட்விங்கிள் கன்னா ட்விட்டரில் வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பற்றி ஜோக் போட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரின் மனைவியும், நடிகையுமான ட்விங்கிள் கன்னா உலக நடப்புகள் பற்றி ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருவது வழக்கம். இந்நிலையில் அவர் வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை பற்றி ட்விட்டரில் ஒரு ஜோக் போட்டார்.
அதை பார்த்த ஸ்ரீ ஸ்ரீயின் ஆதரவாளர்கள் பொங்கி எழுந்துவிட்டனர்.

ட்விங்கிள்
தான் சாதாரணமாக போட்ட ஒரு ஜோக்கிற்கு இப்படி கொந்தளிக்கிறார்களே என்று நினைத்த ட்விங்கிள் அந்த சர்ச்சைக்குரிய ட்வீட்டை நீக்கிவிட்டார். ட்விங்கிளின் ட்வீட்டால் அக்ஷய் குமாரின் ஹவுஸ்புல் 3 படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அக்கியின் ஹவுஸ்புல் 3 படத்தை புறக்கணிக்குமாறு ஸ்ரீ ஸ்ரீயின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
|
ஜோக்
யார் மனதையும் புண்புடுத்த நினைக்கவில்லை. அது ஒரு ஜோக். நான் செய்த தவறை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் என்னிடத்தில் உள்ளது என்று ட்விங்கிள் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
|
ஆதரவு
ட்விங்கிள் கன்னாவை ஸ்ரீ ஸ்ரீயின் ஆதரவாளர்கள் ட்விட்டரில் வசை பாடுவதை பார்த்த மக்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் ஸ்ரீ ஸ்ரீயின் ஆட்களை திட்டியும் ட்வீட் போட்டுள்ளனர்.
|
மன்னிப்பு
ட்விங்கிள் நீங்கள் ஏன் வாழும் கலை குண்டர்களிடம் மன்னிப்பு கேட்டீர்கள். நீங்கள் ஜோக் கூறினீர்கள் அவ்வளவு தான் என சூரியநாராயண் கணேஷ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications