விடை தெரியாத புதிர்களுடனேயே புதைக்கப்படும் தாரகை 'மயிலு'?
விடை தெரியாத புதிர்களுடன் லேடி சூப்பர் ஸ்டார் ஸ்ரீதேவி புதைக்கப்பட இருக்கிறார்.
Recommended Video

மும்பை: திரைவானில் பெரு நட்சத்திரமாக ஜொலித்தாலும் தனி வாழ்வில் தம்மை அதிகமாக தனிமைப்படுத்தக் கொண்ட தாரகை மயில் மரணத்திலும் விடை தெரியாத புதிர்களுடன் புதைக்கப்பட உள்ளார்.
தமிழகத்தின் சிவகாசி அருகே மீனம்பட்டி எனும் குக்கிராமத்தில் பிறந்து ஒட்டுமொத்த இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவராக உச்சம் தொட்டவர் 'மயிலு' ஸ்ரீதேவி. 40 ஆண்டுகளுக்கு முன்னர் நடித்த கதா பாத்திரத்தால் காலம் முழுவதும் கொண்டாடப்பட்டவர் ஸ்ரீதேவி.
ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் சினிமாவில் தலையெடுத்துக் கொண்டிருந்த காலங்களில் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக போற்றப்பட்டவர் ஸ்ரீதேவி. மும்பையில் செட்டிலாகி இந்தி திரை உலகை தன் வசமாக்கினார்.

ஸ்ரீதேவியின் அகால மரணம்
இப்படி ரசிகர்களும் திரை உலகமும் உச்சி முகர்ந்து ஏன் வழிபாடே நடத்திய ஸ்ரீதேவின் அகால மரணம் பேரதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. அதைவிட அவரது மரணம் இப்படித்தான் நிகழ்ந்தது என அறிய முடியாதது பெரும் கொடுமை.

அந்த கடைசி நிமிடங்கள்
ஸ்ரீதேவி எனும் கலையரசியின் கடைசி நிமிடங்கள் பெரும் வேதனையில் முடிந்ததா? பெரும் மயக்கத்தில் முடிந்ததா? பேரவலத்தால் முடிந்து போனதா? எதுவும் தெரியாத இருட்டு நிமிடங்களாகவே அவை இருக்கின்றன. யார் வாயும் இப்போதுவரை திறக்கப்படவில்லை.

புதிர்களையும் புதைக்கிறது
புனைவுகள், யூகங்கள் இவைகளுடன் காயங்கள் என கலந்து வரும் ஒவ்வொரு செய்தியும் அந்த தேவதையின் ரசிகர்களை பாடாய்படுத்துகிறது... கண்ணே... கலைமானே என தாலாட்டுப் பாடி உறங்க வைக்கப்பட வேண்டிய அந்த பொற்சித்திரம் தன்னுடன் ஏராளமான புதிர்களையும் புதைத்துக் கொள்ளப் போகிறது.

திரைவானில் நட்சத்திரம்
இனி எவர் எது சொன்னாலும் ஸ்ரீதேவி எனும் நடிப்புப் பெருநெருப்பின் புகழ் மீது வீசப்பட்ட அந்த கச்சா எண்ணெய் கறைகள் அகன்றுவிடவா போகின்றன?
தமிழ் மண்ணின் 'செந்தூரப் பூவே'... சென்று வா!
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications