ஸ்ரீவித்யாவின் சொத்துகள் அபகரிப்பு... கணேஷ்குமார் எம்எல்ஏ கைதாவாரா?
மறைந்த நடிகை ஸ்ரீவித்யாவின் சொத்துக்களை அபகரித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள கணேஷ்குமார், கைதாகும் சூழல் உருவாகியுள்ளது.
1976-ல் ஜார்ஜ் தாமஸ் என்ற உதவி இயக்குனரை ஸ்ரீவித்யா மணந்தார். பிறகு அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. 1980-ல் விவாகரத்து செய்து பிரிந்தனர்.

பின்னர் ஸ்ரீவித்யா சென்னையை விட்டு திருவனந்தபுரத்துக்கு குடிபெயர்ந்து அங்கேயே தங்கினார். சம்பாதித்த பணத்தில் நிறைய சொத்துக்கள் வாங்கினார். திருவனந்தபுரத்தில் அவருக்கு சொந்தமான வீடுகள், வணிக வளாகங்கள் உள்ளன.
2006-ல் ஸ்ரீவித்யா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். சாவதற்கு முன் தனது சொத்துக்களை அறக்கட்டளையாக்கி ஏழைகளுக்கு உதவவும், நடன பள்ளி தொடங்கவும் எழுதி வைத்தார். அதற்கு பொறுப்பாளராக மலையாள நடிகரும் எம்எல்ஏவுமான கணேஷ்குமார் நியமிக்கப்பட்டார்.
ஆனால் உயில்படி சொத்துக்கள் பராமரிக்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. சொத்துக்களை அபகரிக்க முயற்சி நடப்பதாகவும், முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் கேரள முதல்வர் உம்மன் சாண்டியிடம் ஸ்ரீவித்யாவின் சகோதரர் சங்கர்ராமன் புகார் மனு அளித்துள்ளார்.
இதுகுறித்து விசாரிக்க போலீசுக்கு உத்தரவிடப்பட்டது. திருவனந்தபுரம் குற்றப்பிரிவு போலீஸ் சூப்பிரண்டு ராஜ்பால் மீனா தலைமையில் போலீசார் விசாரணை தொடங்கியுள்ளனர். நடிகர் கணேஷ்குமாரிடமும் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் கணேஷ்குமார் கைதாவார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications