மு.க.ஸ்டாலினை "ஸ்வான்" பல்வா சந்திக்கவே இல்லை: ஆ. ராசா திட்டவட்ட மறுப்பு!
டெல்லி: ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஸ்வான் டெலிகாம் நிறுவன இயக்குநர் ஷாகித் பல்வாவை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சந்திக்கவே இல்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கூறியுள்ளார்.
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கலைஞர் டிவிக்கு பணம் கைமாறியது தொடர்பாக அமலாக்கப்பிரிவு தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில், தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பெயர் இடம்பெற்றுள்ளது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஸ்வான் டெலிகாம் நிறுவன அதிபர் ஷாகித் பல்வா, மு.க.ஸ்டாலினை சந்தித்ததாக கூறப்பட்டுள்ளது.

இதே வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் நண்பரான மறைந்த சாதிக் பாட்சா அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், இத்தகவலை அமலாக்கப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், இக்குற்றச்சாட்டுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மறுப்பு தெரிவித்தார். டெல்லி செல்வதற்காக நேற்று சென்னை விமான நிலையத்துக்கு வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
எந்த சந்தர்ப்பத்திலும், ஷாகித் பல்வாவுக்கும், மு.க.ஸ்டாலினுக்கும் இடையிலான சந்திப்பு நடக்கவில்லை. இது, புனையப்பட்ட கதை. அமலாக்கப்பிரிவு உருவாக்கிய கதை.
என் தலைவர் மு.க.ஸ்டாலினின் நற்பெயரை களங்கப்படுத்த மேற்கொள்ளப்படும் அரசியல் சதி.
அதிலும் 3 ஆண்டுகள் கழித்து, இப்படி ஒரு தகவலை அமலாக்கப்பிரிவு வெளியிட்டு இருப்பது வினோதமாக இருக்கிறது. மேலும், சாதிக் பாட்சா இறந்து விட்டதால், அவரது வாக்குமூலம் செல்லுபடி ஆகாது. இறந்துபோன ஒருவரது சாட்சியை, இந்திய அரசியலமைப்பு சட்டப்படி, நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளாது.
இவ்வாறு ஆ.ராசா கூறினார்.
‘மு.க.ஸ்டாலினுக்கு எதிரான அரசியல் சதியில் ஈடுபடுவது யார்?' என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு ஆ.ராசா, ஆட்சியில் இருந்த கட்சி என்று கூறினார்.
‘காங்கிரசா?' என்று செய்தியாளர்கள் கேட்டபோது, ‘ஆமாம்' என்று ஆ.ராசா பதில் அளித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications