அதிமுக எம்பிக்களை ராஜினாமா செய்ய சொல்ல ஸ்டாலின் ஒன்றும் எங்கள் தலைவர் இல்லை.. தம்பிதுரை தடாலடி
அதிமுக எம்பிக்களை ராஜினாமா செய்ய சொல்ல ஸ்டாலின் ஒன்றும் எங்கள் தலைவர் இல்லை என தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
டெல்லி: அதிமுக எம்பிக்களை ராஜினாமா செய்ய சொல்ல ஸ்டாலின் ஒன்றும் எங்கள் தலைவர் இல்லை என தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
லோக்சபா துணை சபாநாயகரும் அதிமுக எம்பியுமான தம்பிதுரை 3 மாநில சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதற்கு நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நாடாளுமன்றத்தில் அதிமுக எம்பிக்கள் வலுயுறுத்தியுள்ளதாக கூறினார்.
தமிழக அரசின் கோரிக்கைகள் குறித்து பிரதமரிடம் நேரில் வலியுறுத்தியிருப்பதாகவும் தம்பிதுரை தெரிவித்தார். இதைத்தொடர்ந்து காவிரி விவகாரத்தில் தமிழக எம்பிக்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என ஸ்டாலின் கூறியது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த தம்பிதுரை அதிமுக எம்பிக்களை ராஜினாமா செய்யச்சொல்ல ஸ்டாலின் ஒன்றும் எங்கள் தலைவர் இல்லை என்றார். எங்கள் தலைமை என்ன சொல்கிறதோ அதன்படிதான் செயல்படுவோம் என்றும் தம்பிதுரை திட்டவட்டமாக தெரிவித்தார்.
முதலில் திமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்துக்கு வந்து தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றட்டும் என்றும் தம்பிதுரை கூறினார்.
-
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்!












Click it and Unblock the Notifications