ஸ்டார் ஹோட்டலில் திவ்யாவின் அலங்கோல நடனம்.. கண்ணை உறுத்திய ரூ.17 கோடி நிலம்.. இப்படியொரு ஒரு பெண்ணா
கான்பூர்: கள்ளக்காதல் விவகாரத்தினால் ஏற்படும் விவாகரத்துகள், வன்முறைகள் பெருகி கொண்டிருக்கின்றன. திருமணமான ஆண், பெண்கள், கள்ளக்காதலுக்காக, உலகமறியாத பச்சிளம் குழந்தைகளின் உயிர்களையும் சேர்த்து காவு வாங்கிவிடுகிறார்கள்.. இதுகுறித்த கலக்கங்களும், வருத்தங்களும் நிலவும் சூழலில், பரிதாபத்துக்குரிய ஆண்கள் சிலர் தற்கொலைகளை கையில் எடுத்து விடுவார்கள்.. அப்படியொரு சம்பவம் வடமாநிலத்தில் நடந்துள்ளது.
அரியானா மாநிலம் ரோத்தக் நகரில் உள்ளது தோப் என்ற பகுதி.. இங்கு வசித்து வரும் அஜய் என்ற இளைஞர், ஹிசார் பகுதியை சேர்ந்த திவ்யா என்ற பெண்ணை காதலித்து வந்தார்.

ஃபேஸ்புக் மூலம் பழகி, கடந்த 2020ம் ஆண்டு முதல் காதலித்து வந்தனர்.. ஒரு கட்டத்தில், டெல்லியிலுள்ள ஆரிய சமாஜத்தில் இவர்கள் 2 பேரும் திருமணம் செய்து கொண்டனர்.
தகாத உறவு
இந்நிலையில், திவ்யாவுக்கு தீபக் என்ற இன்ஸ்பெக்டருடன் தகாத உறவு ஏற்பட்டு உள்ளது... உயிருக்கு உயிராக காதலித்த மனைவியின் நடத்தையில், திடீரென இப்படியொரு மாற்றம் தென்பட்டதை அறிந்து, அஜய் அதிர்ச்சி அடைந்தார்.. மனைவியை கண்டித்தும் அதை திவ்யா பொருட்படுத்தவில்லை.
தீபக்குடன் சேர்ந்து நள்ளிரவில் ஆபாச நடனம் ஆடுவது, வீடியோ எடுப்பது போன்ற செயல்களில் திவ்யா ஈடுபட்டு வந்துள்ளார்.. இதையெல்லாம் பார்த்து சகிக்க முடியாமல், அஜய் தற்கொலையே செய்து கொண்டார்... அஜய்யின் தற்கொலையால் திவ்யா நிம்மதியடைந்தார்..
ஆனால், அஜய்யின் கொலை குறித்து போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.. அஜய்யின் செல்போனை கைப்பற்றி சோதனை நடத்தினார்கள்.. அப்போதுதான், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின..

ஸ்டார் ஓட்டலில் நடனம்
அதாவது, ஸ்டார் ஓட்டல் ஒன்றில் அரைகுறை ஆடையுடன், தீபக்குடன் திவ்யா நடனமாடியிருக்கிறார்.. இதைத்தவிர செல்போனில் ஆபாச வீடியோவும் உள்ளதாக கூறப்படுகிறது.
இதனை யாரோ வீடியோ எடுத்து, அஜய்க்கு அனுப்பி வைத்துள்ளனர்.. அப்போதிருந்துதான் அஜய் மன உளைச்சலில் தவித்து வந்ததாக தெரிகிறது. இதற்கு பிறகுதான் தற்கொலை முடிவை எடுத்தாராம்.
ஆனால், திவ்யாவுக்கு ஏற்கனவே ஒரு திருமணம் நடந்துள்ளது.. முதல் திருமணம் நடந்தது பற்றி அஜய்க்கு தெரியாமல் மறைத்து ஏமாற்றி திவ்யா திருமணம் செய்துள்ளார்.
விவாகரத்து பெற்ற கணவர்
பிறகு அஜய்க்கு இந்த விஷயம் தெரிந்தாலும், திவ்யா மீதுள்ள அன்பு காரணமாக, திவ்யாவின் முதல் கணவருக்கு பணம் கொடுத்து விவாகரத்து பெற்றிருக்கிறார் அஜய்.. திவ்யாவுக்கு திருமணத்திற்கு முன்பே ஒரு மகனும் இருக்கிறாராம்.. மற்றொருபுறம் கள்ளக்காதலனுடன் லிவ்-இன் உறவிலும் இருந்து வந்திருக்கிறார். அந்தவகையில், திவ்யாவுக்கு அஜய் 3-வது காதலன் ஆவார்.

அஜய் சற்று வசதியானவர்.. ரூ.20 கோடி மதிப்பிலான நிலத்தையும் வைத்திருக்கிறார்.. ஆனால் மனைவிக்காக பணத்தை கொட்டி தருவாராம்.. அவர் என்ன கேட்டாலும் வாங்கி தந்துவிடுவாராம். ஒருகட்டத்தில் பண்ணையில் வேலை செய்து, ரூ.1.5 லட்சம் பணம் ஈட்டி, அதையும் திவ்யாவுக்கே தந்துள்ளார்.. வீட்டிலிருந்த தங்க நகைகளை விற்று, அதையும் திவ்யாவின் அக்கவுண்ட்டிலேயே போட்டுள்ளார்..
உணவு டெலிவரி வேலை
இதனால் பணமின்றி வாடும் நிலைமை அஜய்க்கு வந்துள்ளது.. அப்போது ஐபோன் வேண்டும் என்று திவ்யா கேட்டாராம். இதற்காக, உணவு டெலிவரி செய்யும் வேலையிலும் சேர்ந்துள்ளார். அதில் கிடைத்த ரூ.1.5 லட்சம் பணத்தை பெற்று ஐபோன் வாங்கி தந்துள்ளார். திவ்யா ஒவ்வொரு பொருளாக கேட்க, கேட்க, அத்தனையையும் உழைத்தே சம்பாதித்து தந்துள்ளார் அஜய்..
கள்ளக்காதலனுடன் மும்பையில் செட்டில் ஆக வேண்டும் என்பதற்காகவும், தீபக்கின் புரமோஷனுக்காகவும் ரூ.5 லட்சம் திவ்யாவுக்கு தேவைப்பட்டுள்ளது.. இந்த பணத்தையும் அஜய்யிடமே கேட்டுள்ளார்..
17 கோடி நிலம்
அஜய்யிடம் அந்த நேரத்தில் பணம் இல்லாததால், தீபக்குடன் நள்ளிரவில் அரைகுறையான ஆடையுடன் ஓட்டலில் ஆபாச நடனம் ஆடிய வீடியோவை செல்போனில் அஜய்க்கு அனுப்பி, இந்த வீடியோவை பரப்பி விடுவேன் என்றும் மிரட்டி அஜய்க்கு தொந்தரவு தந்துள்ளார். அதனை கணவருக்கு அனுப்பி, கணவரிடமே பணம் கேட்டு மிரட்டல் விடுத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
இப்படிப்பட்ட சூழலில்தான், ரூ.17 கோடி நிலம், அஜய்யின் தந்தைக்கு இருப்பது திவ்யாவுக்கு தெரியவந்தது.. உடனே அந்த சொத்துக்களை அபகரிக்க முடிவு செய்தார்.. ஆனால், அஜயின் அப்பா ரன்வீர் இருக்கும்வரை அந்த சொத்து தனக்கு கிடைக்காது என்று முடிவு செய்த திவ்யா, ரன்வீரை கொலை செய்து விட்டு, கோடிக்கணக்கான மதிப்பிலான நிலங்களை விற்று அந்த தொகையை உடனே தரவேண்டும் என்று அஜய்யை திவ்யா கட்டாயப்படுத்தினாராம்.
2 பேருமே கைது
ஆனால், பெற்ற தகப்பனை கொல்ல அஜய்க்கு மனமில்லை.. எனவே, தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து, தூக்கிலும் தொங்கிவிட்டார்.. ஆனால், தற்கொலைக்கு முன்பு 2 வீடியோக்களை வெளியிட்டுள்ளார் அஜய்..
அதில், தன் முடிவுக்கு காரணமான திவ்யா மற்றும் தீபக் ஆகிய இருவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு கண்ணீர் கோரிக்கை விடுத்துள்ளார்.. இதையடுத்து, தீபக், திவ்யா இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications