நடுவானில் ‘பறந்து’ கொண்டே வித்தியாசமாக யோகா தினத்தைக் கொண்டாட ஏர் இந்தியா திட்டம்
டெல்லி: சர்வதேச யோகா தினத்தை பறந்து கொண்டே வித்தியாசமாக கொண்டாட ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது.
வரும் ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினமாகக் கொண்டாடப் பட உள்ளது. அன்றைய தினம் இந்தியா முழுவதும் யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்த ஏற்பாடுகள் செய்யப் பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஏர் இந்தியா நிறுவனமும் யோகா தினத்தை வித்தியாசமாகக் கொண்டாட முடிவு செய்துள்ளது. அதன்படி, அன்றைய தினம் யோகா குறித்த திரைப்படங்களை இந்தியா முழுவதிலுமுள்ள ஏர் இந்தியா விமானத்தில் ஒளிபரப்ப ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது.

மேலும் ஏர் இந்தியாவில் பணிபுரியும் 21 ஆயிரம் பணியாளர்களுக்கு, யோகா மற்றும் தியான நிகழ்ச்சிகளையும் நடத்திட அந்நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
இது தொடர்பாக ஏர் இந்தியாவின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘அனைத்து பணியாளர்களும் தினசரி யோகாவை பயிற்சி செய்து வந்தால் அவர்களின் வாழ்க்கை முறை உற்சாகமானதாக மாறும். யோகா தினத்திற்கான பிரதமரின் ஆதரவையும் அவரது கூட்டு அழைப்பையும் நாங்கள் முன்னெடுத்துச் செல்கிறோம்" என்றார்.
விமானம் பறக்கும்போது விமானிகளும் யோகா செய்வார்களா என்பது குறித்து ஏர் இந்தியா எதுவும் சொல்லவில்லை.!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications