Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பற்றி எரியும் லடாக்.. பாஜக அலுவலகத்துக்கு தீவைப்பு.. மாநில அந்தஸ்து கோரிய போராட்டத்தில் வன்முறை

Subscribe to Oneindia Tamil

லடாக்: லடாக்கிற்கு தனி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். அதேபோல் அரசியலமைப்பின் 6வது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அங்கு உண்ணாவிரதம் போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டத்துக்கு நடுவே இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு வன்முறையானது. லே பகுதியில் உள்ள பாஜகவின் அலுவலகம், போலீஸ் வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்து எரித்தனர்.

மாநிலமாக இருந்த ஜம்மு காஷ்மீர் கடந்த 2019ம் ஆண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. 2019 ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதோடு, ஜம்மு காஷ்மீர் என்ற யூனியன் பிரதேசமும், லடாக் என்ற யூனியன் பிரதேசமும் புதிதாக உருவாக்கப்பட்டது.

ladakh leh

கடந்த ஆண்டு ஜம்மு காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. லடாக் பகுதி துணை நிலை ஆளுநர் கட்டுப்பாட்டில் தான் இருந்து வருகிறது. இந்நிலையில் தான் ஜம்மு காஷ்மீரை மீண்டும் மாநிலமாக்க வேண்டும் என்ற கோரிக்கையை போல், லடாக்கில் வசிக்கும் மக்களும் தனி மாநில அந்தஸ்து கோரி வருகின்றனர். இந்த மாதம் தொடக்கத்தில் லடாக்கில் இந்த போராட்டம் தீவிரமடைய தொடங்கியது.

கடந்த 10ம் தேதி முதல் காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக் உள்பட பலரும் உண்ணாவிரதத்ததை தொடங்கினர். லடாக்கை தனி மாநிலமாக மத்திய அரசு அங்கீகரிக்க வேண்டும். வடகிழக்கு மாநிலங்களை போல் லடாக்கை அரசியலமைப்பு அட்டவணை 6ல் சேர்த்து சுயாட்சி மாநிலமாக்க வேண்டும் என்று கூறினர். இந்த உண்ணாவிரதம் காரணமாக நேற்று முன்தினம் சிலர் மயங்கினர். இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு செல்லவில்லை.

மத்திய அரசு சார்பில் அடுத்த மாதம் (அக்டோபர் ) 6ம் தேதி பேச்சுவார்த்தை நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் கோபமடைந்தவர்கள் தனிமாநில கோரிக்கை மற்றும் அரசியலமைப்பு அட்டவணை 6ல் லடாக்கை சேர்ப்பது உள்ளிட்ட கோரிக்கையை முன்வைத்து இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர். இதையடுத்து இன்று காலையில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அந்த சமயத்தில் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். போலீசாரின் வாகனங்களுக்கு தீவைத்தனர். அதுமட்டுமின்றி மத்திய அரசுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் லே நகரில் உள்ள பாஜக அலுவலகத்தின் மீது கல்வீசி சூறையாடினர். அலுவலகத்துக்கு தீவைத்து எரித்தனர்.

இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து லடாக், லே நகரில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை கட்டுப்படுத்தும் பணியை தொடங்கி உள்ளனர். நிலைமை எல்லை மீறி போனதால் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+