பெட்டில் சிறுநீர் கழித்த 5 வயது சிறுவன்.. அந்தரங்க பாகங்களில் சூடுவைத்த வளர்ப்புத் தாய்
போபால்: மத்தியப்பிரதேசம், குணா மாவட்டத்தில் 5 வயது சிறுவன் பெட்டில் சிறுநீர் கழித்ததற்காக அவரது வளர்ப்புத் தாய் சிறுவனின் அந்தரங்க பாகம் உள்ளிட்ட பல இடங்களில் சூடுவைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக சிறுவனின் பாட்டி அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிறந்த குழந்தைகள் முதல் சிறுவர்கள் வரை தூக்கத்தில் படுக்கையிலேயே சிறுநீர் கழிப்பது என்பது இயற்கையாக நடைபெறும் ஒரு விஷயம்தான். குழந்தைகளுக்கான டயப்பர்கள், வயதானவர்களுக்கான டயப்பர்கள் என பல்வேறு வசதிகள் இன்றைய காலத்தில் வந்துவிட்டன. இது நாள்பட்ட பிரச்னையாக இருக்கும்பட்சத்தில் மருத்துவர்களை அணுகி உரிய தீர்வும் காண முடியும். இந்நிலையில், மத்தியப்பிரதேசத்தில் 5 வயது சிறுவன் படுக்கையில் சிறுநீர் கழித்ததற்காக அவரது வளர்ப்புத் தாய் பல்வேறு பாகங்களில் சூடுவைத்ததில் பாதிக்கப்பட்ட சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

மத்தியப்பிரதேச மாநிலம், குணா மாவட்டத்தில் உள்ள பார்பத்புரா என்ற பகுதியைச் சேர்ந்தவர் ரெய்ஜா பனோ (44). 5 வயது சிறுவனின் வளர்ப்புத் தாயான இவர், சிறுவன் தூக்கத்தில் படுக்கையிலேயே சிறுநீர் கழித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த ரெய்ஜா பனோ, சிறுவனின் அந்தரங்க பாகம் உள்பட பல்வேறு இடங்களில் கரண்டியால் சூடுவைத்துள்ளார். இதனால், சிறுவன் உடல்நலம் குன்றி கடுமையாகப் பாதிப்படைந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுவனின் பாட்டி இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
போலீஸாரின் விசாரணையில், ரெய்ஜா பனோ சிறுவன் படுக்கையிலேயே சிறுநீர் கழித்ததற்காக சூடுவைத்ததை ஒப்புக் கொண்டுள்ளார். மேலும், சிறுவனை அடித்து தாக்கியதும், இடுப்பு, மணிக்கட்டு, கன்னம் மற்றும் அந்தரங்க பாகங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கரண்டியால் சூடுவைத்துள்ளது தெரிந்து போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். இதனால், சிறுவனின் உடல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தந்தை மற்றும் பாட்டி சிறுவனை மீட்டு பினாகஞ்ச் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு மருத்துவர்கள் சிறுவனுக்கு தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications