ஸ்டெர்லைட் ஆலை மாசு: முன்னாள் நீதிபதி தலைமையில் ஆய்வு குழு.. பசுமை தீர்ப்பாயம் அதிரடி
ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய முன்னாள் நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
டெல்லி: ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய முன்னாள் நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் விவகாரம் மீண்டும் பெரிதாகி உள்ளது. ஸ்டெர்லைட் ஆலை குறித்த வழக்கு தற்போது தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன், தேசிய பசுமை தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலையில் சீராய்வு பணிகளை செய்ய அனுமதித்தது.

அதன்பின் அந்த ஆலையை மூட தமிழக அரசு வெளியிட்டு இருந்த அரசு ஆணையை ரத்து செய்து தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆணையிட்டது. இது தமிழக அரசுக்கு பெரிய பின்னடைவாக மாறியது. இந்த நிலையில் இந்த வழக்கில் புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதன்படி ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய முன்னாள் நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆலையை ஆய்வு செய்ய முன்னாள் நீதிபதி எஸ்.கே.வசிப்தர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஆலையில் இருந்து வெளியாகும் மாசு குறித்து ஆராய வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும். 6 வாரத்திற்குள் குழு அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆணையிட்டுள்ளது.
இந்த குழு அளிக்கும் அறிக்கையை பொறுத்தே, தீர்ப்பு வழங்கப்படும். இதனால் இந்த ஆய்வு அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
-
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
பிரபல துணை நடிகை தீபாவின் தந்தைக்கு அரிவாள் வெட்டு.. டீக்கடையில் பயங்கரம்! என்ன நடந்தது? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications