அதிர்ந்த ராஜஸ்தான்..மாமன்னன் வடிவேலுக்கு நடந்த அதே கொடுமை!குடும்பத்தோடு பதைபதைத்த காங்கிரஸ் எம்எல்ஏ
ஜெய்பூர்: அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ள ராஜஸ்தானில், அம்மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ. காரில் குடும்பத்துடன் சென்றபோது ஒரு கும்பல் அவரை வழிமறித்து கல்வீசி தாக்கிய சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தின் சவாய் மதோபுர் தொகுதி எம்.எல்.ஏவாக இருப்பவர் அப்ரார். வரும் தேர்தலிலும் அவரையே வேட்பாளராக காங்கிரஸ் கட்சி அறிவித்து இருக்கிறது. இந்த நிலையில் அவருக்கு எதிராக அப்பகுதியை சேர்ந்த காங்கிரஸ் கட்சியினரே போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார்கள். அவரை வேட்பாளராக நிறுத்தக் கூடாது என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரு தரப்பு போர்க்கொடி தூக்கிய நிலையில் அதை பொருட்படுத்தாமல் காங்கிரஸ் மாநில தலைமை அப்ராருக்கு சீட் வழங்கியது.

இந்த நிலையில் அப்ரார் தனது தாய் மற்றும் குடும்பத்தினருடன் காரில் சென்று கொண்டிருந்தார். மலர்னா சௌத் பைபாஸ் பகுதியில் இவரது கார் சென்று கொண்டு இருந்தபோது ஒரு கும்பல் கருப்பு கொடியுடன் அப்ராரின் காரை தடுத்து நிறுத்தியது. அந்த கும்பலில் இருந்தவர்கள் அப்ரார் கார் மீது கற்களை வீசி கடுமையாக தாக்குதல் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ. அப்ரார் தெரிவிக்கையில் சமூக விரோத சக்திகள் இதன் பின்னணியில் உள்ளது என குற்றம்சாட்டி உள்ளார்.
கல்வீச்சு தாக்குதல் ஈடுபட்டவர்களில் சிலர் அடையாளம் காணப்பட்டு இருப்பதாகவும், விரைவில் அவர்களை கைது செய்வோம் என காவல்துறை தெரிவித்து இருக்கிறது. அப்ரார் காங்கிரஸ் வேட்பாளராக இம்முறை நிறுத்தப்பட்டதற்கு சவாய் மதோபூர் மற்றும் ஜெய்பூர் பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினரே எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்கள். அவருக்கு எதிராக பாஜக மாநிலங்களவை உறுப்பினர் கிரோடி மீனாவுக்கு சீட் வழங்கி இருக்கிறது.
இந்த நிலையில் இந்த கல்வீச்சு தாக்குதலை நடத்தியது அப்ராருக்கு எதிர் தரப்பில் உள்ள காங்கிரஸ் கட்சியினரா அல்லது எதிர்க்கட்சியினரா இல்லை வேறு கும்பலா என்ற கேள்வி எழுந்து உள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான மாமன்னன் படத்தில் எம்.எல்.ஏவான வடிவேலுவை அவரது தொகுதியில் பிரச்சாரம் செய்ய விடாமல் சொந்த கட்சியினரே தடுப்பதும், தாக்குவதுமாக இருப்பார்கள். ராஜஸ்தானில் நடைபெற்று உள்ள இந்த சம்பவம் அதை நினைவுபடுத்துகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications