கர்நாடகா மட்டுமில்லை, பிசிசிஐயும் மதிக்கவில்லை! கடவுள் மாதிரி நடக்காதீர்கள்.. சீறிய சுப்ரீம்கோர்ட்
டெல்லி: கடவுள் மாதிரி நடந்து கொள்ளாமல் லோதா கமிட்டி பரிந்துரையை ஏற்று செயல்படுத்துங்கள் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு குட்டு வைத்துள்ளது உச்சநீதிமன்றம்.
ஐபிஎல் சூதாட்டம் குறித்து விசாரித்த ஓய்வு பெற்ற நீதிபதி லோதா தலைமையிலான கமிட்டி பிசிசிஐ அமைப்பை சீர் செய்ய பல்வேறு பரிந்துரைகளை சமர்ப்பித்தது. இந்த பரிந்துரைகளை செயல்படுத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

ஆனால் துரும்பையும் கிள்ளி போட தயாராக இல்லை பிசிசிஐ. அதிகார சுகம் கண்டவர்களால் லோதா கமிட்டி அறிக்கையை செயல்படுத்தி அதிகாரத்தை இழக்க விருப்பமில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், லோதா கமிட்டி இன்று சுப்ரீம்கோர்ட்டை அணுகி, உத்தரவை செயல்படுத்தாத பிசிசிஐயின் மெத்தனத்தை தோலுரித்தது. பிசிசிஐ தலைமையிலுள்ள அதிகாரிகள் அனைவரையும் டிஸ்மிஸ் செய்ய லோதா கமிட்டி வேண்டுகோள்விடுத்தது.
இதையடுத்து பிசிசிஐக்கு கண்டனம் தெரிவித்த சுப்ரீம் கோர்ட், பிசிசிஐ கடவுளை போல நடந்து கொள்ள வேண்டாம், ஒழுங்காக விதிமுறைக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவை நீங்கள் மதிக்கவில்லை என்றால், உத்தரவை எப்படி செயல்படுத்த வைப்பது என்று நீதிமன்றத்திற்கு தெரியும். உங்களை நேர் வழியில் கொண்டுவர உரிய உத்தரவுகளை பிறப்பிப்போம். இவ்வாறு நீதிமன்றம் கூறியது.
காவிரியில் தண்ணீர் திறந்துவிட சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்ட பிறகும், கர்நாடகா தொடர்ந்து தண்ணீர் திறக்காமல் இழுத்தடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications