நன்கொடையை வங்கிகளில் டெபாசிட் செய்ய அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் அதிரடி உத்தரவு!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: அரசியல் அரசியல் கட்சிகள் ரொக்கமாக பெறுகிற நன்கொடை பணத்தை வங்கியில்தான் டெபாசிட் செய்ய வேண்டும் என்று தேர்தல் கமிஷன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
அரசியல் கட்சிகளின் நிதி நிர்வாகத்தில்- குறிப்பாக நிதி வழங்குதல், தேர்தல் செலவினம் போன்றவற்றில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வருவதற்கு தேவையான விதிமுறைகளை அமல்படுத்தும் அதிகாரத்தை தேர்தல் கமிஷனுக்கு இந்திய அரசியல் சாசன சட்டம் பிரிவு 324 வழங்கி உள்ளது.

இதன்படி தேர்தல் கமிஷன் சில விதிமுறைகளை வகுத்து கடந்த ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவுகள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளன. அதன் முக்கிய அம்சங்கள்:
- கட்சியின் அனைத்து மாநில அமைப்புகளும், அடிமட்ட அமைப்புகளும் வங்கிக்கணக்கினை பராமரிப்பதையும், கட்சியின் மத்திய தலைமை அலுவலகத்தில் தொகுக்கப்பட்ட கணக்குகளை பராமரிப்பதையும் ஒரு (தேசிய) கட்சியின் பொருளாளர் உறுதி செய்ய வேண்டும்.
- அரசியல் கட்சியின் நிதி கணக்குகள், தணிக்கை போன்றவற்றில் இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனத்தின் வழிகாட்டும் குறிப்பினை பொருளாளர் பராமரித்து வருகிற கணக்குகள் உறுதி செய்ய வேண்டும்.
- வருமான வரிச்சட்டத்தின்கீழ், ஆண்டு கணக்குகள் ஆடிட்டரால் தணிக்கை செய்து, சான்று அளிக்கப்பட வேண்டும்.
- ரொக்கமாக எந்தவொரு தனிப்பட்ட நபருக்கும் அல்லது நிறுவனத்துக்கும் ரூ.20 ஆயிரத்துக்கு அதிகமாக அளிக்கக்கூடாது.
- வங்கி இல்லாத கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு, நிறுவனங்களுக்கு கொடுப்பதில் விதிவிலக்கு உண்டு.
- அதே போன்று ஊழியர் அல்லது கட்சி நிர்வாகியின் சம்பளம், ஓய்வூதியம், செலவு செய்த தொகையை ஈடுகட்டல் போன்றவற்றுக்கும் இந்த விதிமுறை பொருந்தாது.
- வேட்பாளர்களின் தேர்தல் செலவு குறித்து மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் உச்சவரம்பினை நிர்ணயித்துள்ளது. அரசியல் கட்சிகள் வழங்குகிற நிதி, நிர்ணயிக்கப்பட்ட உச்சவரம்பைக்காட்டிலும் அதிகமாக இருக்கக்கூடாது. அந்த நிதி உதவியும் கோடிட்ட காசோலை, டிராப்ட், வங்கி கணக்கில் நேரடி மாற்றம் மூலமே வழங்கப்பட வேண்டுமே தவிர ரொக்கமாக அல்ல.
- அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், இப்படி பங்களிப்பு செய்வது தொடர்பான அறிக்கையினை ‘24 ஏ' பாரத்தில் நிரப்பி அளிக்க வேண்டும். ஆடிட்டரால் தணிக்கை செய்து சான்றளிக்கப்பட்ட ஆண்டு கணக்கு, தேர்தல் செலவின கணக்கு ஆகியவை தேர்தல் கமிஷனிடம் தாக்கல் செய்யப்பட வேண்டும்.
- அங்கீகரிக்கப்படாத கட்சிகள், அவற்றை மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம் அளிக்க வேண்டும்.
- அரசியல் கட்சிகள் தங்களுக்கு தனிப்பட்ட நபர்கள், நிறுவனங்கள் நன்கொடைகள் வழங்குகிறபோது, அவர்களின் பெயர்கள், முகவரிகளை பராமரித்து வரவேண்டும்.
- ரொக்கமாக நன்கொடை பெற்றால், அதை அரசியல் கட்சிகள் ஒரு வார காலத்தில் டெபாசிட் செய்து, கணக்கில் சேர்த்துவிட வேண்டும்.
- இருப்பினும் ஒரு குறிப்பிட்ட தொகையினை அரசியல் கட்சிகள் தங்களது அன்றாட செலவுகளுக்காக கையில் வைத்துக்கொள்ளலாம்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications