மிரட்டும் முகமது ஷமி, ரஷித் கான்.. வலுவான பவுலிங் லைன் அப்.. சென்னையால் சேஸ் செய்ய முடியுமா?
அகமதாபாத்: குஜராத் அணி 215 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்து இருக்கும் நிலையில் வலுவான பவுலிங் லைன் அப் கொண்ட அந்த அணிக்கு எதிராக இவ்வளவு பெரிய ஸ்கோரை சேஸ் செய்வது கொஞ்சம் கஷ்டம்தான்.எனினும் சென்னை சூப்பர் கிங்ஸ் எப்படி எதிர்கொள்ளும் என்பது ரசிகர்களின் ஆவலாக உள்ளது.
16-வது ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் - சென்னை அணிகள் பலப்பரிட்சை நடத்தி வருகின்றன. இந்த இரு அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி நேற்றிரவு நடக்கவிருந்த நிலையில், அகமதாபாத்தில் திடீரென பெய்த கனமழை பெய்ததால் ஆட்டம் இன்று இரவுக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று போட்டி 7.30 மணிக்கு தொடங்கியது.

டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. சென்னை அணி துவக்கத்தில் பந்து வீச்சில் நெருக்கடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஃபீல்டிங்கில் டோட்டலாக சொதப்பியது. இதனால், சுப்மான் கில்-க்கு இரண்டாவது ஓவரிலேயெ கேட்சை தீபக் சஹார் மிஸ் செய்தார். அதன்பிறகு சிக்சரும் பவுண்டரிகளுமாக கில் பறக்க விட்டு அசத்தினார்.
சகார் மட்டும் இல்லை..ஜடேஜா கூட ரன் அவுட் மிஸ் செய்தார். இதனால் தொடர்ந்து சென்னை அணி ஃபீல்டிங்கில் சொதப்ப இந்த வாய்ப்பை கனகச்சிதமாக பயன்படுத்திய குஜராத் அடித்து ஆட ஆரம்பித்தது. அதேவேளையில், தோனி தனது வழக்கமான மின்னல் வேக ஸ்டம்பிங்கால் கில் -லின் அதிரடிக்கு தடை போட்டார். 7 வது ஓவரை ஜடேஜா வீசினார். இதில் கடைசி பந்தில் மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்த தோனி கில்லை ஆட்டமிழக்க செய்தார்.
20 பந்துகளில் 39 ரன்கள் அடித்து இருந்த கில் ஆட்டமிழந்ததும் சென்னை ரசிகர்கள் மைதானத்தில் துள்ளிக் குதித்தனர். தீபக் சஹார் கேட் மிஸ் செய்ததால் அவரை திட்டி தீர்த்துக் கொண்டு இருந்த ரசிகர்கள் கில் ஆட்டமிழந்ததால் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனாலும் இந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை ஏனென்றல் சஹா ஒருபக்கம் அதிரடி காட்ட சாய் சுதர்சன் களத்தில் ருத்ர தாண்டவம் ஆடினார்.
அவரது பேட்டில் பட்ட பந்துகள் எல்லாம் மைதானத்தில் நாலாபுறமும் சிதறி ஓடின. இதனால் குஜராத் அணியின் ரன் ரேட் 10க்கும் கீழ் குறையாமல் போய்க்கொண்டு இருக்கிறது. இதே நிலை நீடித்தால், அந்த அணி 200 ரன்களை தாண்டிவிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குள் தோனி எதையாவது யுக்திகளை கையாண்டு இதற்கு முட்டுக்கட்டை போட முயற்சிப்பார். ஏனெனில் குஜராத் டைட்டன்ஸ் அணியை பொறுத்தவரை சென்னையை விட வலுவான பவுலிங் வரிசையைக் கொண்டது.
முகம்மது ஷமி துவக்கத்தில் நெருக்கடி கொடுப்பார் என்றால் நடு ஓவர்களில் ரஷித் கான் பேட்ஸ்மேன்களுக்கும் சிம்ம சொப்பனமாக இருப்பார். அவரது பந்தில் விக்கெட் கொடுக்காமல் இருந்தாலே போது என்ற அளவுக்குதான் பேட்ஸ்மேன்கள் எதிர்கொள்வதை பல போட்டிகளில் பார்த்து இருக்கிறோம். இதனால் குஜாராத் அணி 200 மேல் அடித்தால் சேஸ் செய்வது கடினம் தான். எனினும் சென்னை அணியும் வலுவான பேட்டிங்கை கொண்டு இருப்பதால் எப்படியும் சேஸ் செய்வோம் என ரசிகர்கள் நம்பிக்கை யுடன் இருக்கிறார்கள்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications