உ.பி பள்ளி மாணவர்களின் பயங்கர அடிதடி: உலா வரும் வீடியோ

Subscribe to Oneindia Tamil

மொராதாபாத்: உத்தரபிரதேசமாநிலம் மொராதாபாத் நகரில் பள்ளி மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சக மாணவனை வெளுத்து எடுத்தும் மாணவனை செல்போன் மூலம் வீடியோ எடுத்து வாட்ஸ் அப் மூலம் பரப்பியுள்ளனர் உடன் படிக்கும் மாணவர்கள்.

மொராதாபாத் நகரில் உள்ள மிக பிரபலமான பள்ளியான ஆர்.ஆர்.கே பள்ளியில்தான் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. 9ஆம் வகுப்பு மாணவர்களும் பத்தாம் வகுப்பு மாணவர்களும்தான் மோதலில் ஈடுபட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.

Students beat up classmate Share Video on Whatsapp

இந்த சம்பவம் குறித்து கருத்து கூறிய பள்ளி முதல்வர், மாணவர்கள் மோதல் எதிர்பாராத நிகழ்வு என்றார். பள்ளிக்கு செல்போன் கொண்டு வரக்கூடாது என்று கூறியும் மாணவர்கள் மறைத்து வைத்து கொண்டு வருகின்றனர். அதனால்தான் சண்டையை கூட வீடியோவாக எடுத்து வாட்ஸ் அப் மூலம் பகிர்ந்துள்ளனர் என்றார். மோதலில் ஈடுபட்ட மாணவர்களை கடுமையாக தண்டிக்கப் போவதாகவும் பள்ளி முதல்வர் கூறினார்.

தமிழக பள்ளிகளில் வகுப்பறை கலவரங்கள் அதிகரித்து வரும் நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தில் பள்ளி வளாகத்தில் மாணவர்கள் மோதிக்கொண்ட சம்பவம் வீடியோ எடுக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் உலா வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+