ஜேன்யூ பல்கலை.யில் தினமும் 3,000 ஆணுறை பயன்பாடாம்: பாஜக எம்.எல்.ஏ. சொல்கிறார்
ஜெய்பூர்: டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவ, மாணவியர் நிர்வாணமாக நடனமாடுவதுடன், நாள் ஒன்றுக்கு 3 ஆயிரம் ஆணுறைகள் பயன்படுத்துவதாக ராஜஸ்தான் மாநில பாஜக எம்.எல்.ஏ. கியான்தேவ் அஹுஜா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் பற்றி தான் நாட்டு மக்கள் விவாதித்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் ராஜஸ்தான் மாநில பாஜக எம்.எல்.ஏ. கியான்தேவ் அஹுஜாவும் அவர்களை பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவ, மாணவியர் பற்றி அவர் கூறுகையில்,

துரோகிகள்
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தான் நாடாளுமன்ற தாக்குதல் தீவிரவாதி அப்சல் குருவை புகழ்ந்து பேசியுள்ளனர். அங்கு படிக்கும் மாணவ, மாணவியர்கள் தேச துரோகிகள்.

பீர் பாட்டில்கள்
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் தினமும் 3 ஆயிரம் பீர் கேன்கள், பாட்டில்கள் கிடக்கும். யார் பீர் குடிக்கிறார்கள் என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்.

சிகரெட், பீடி
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் தினமும் 10 ஆயிரம் சிகரெட் துண்டுகள், 4 ஆயிரம் பீடித் துண்டுகள் கிடக்கின்றன. இது தவிர 50 ஆயிரம் எலும்புகள் வேறு கிடக்கின்றன. அந்த தேச துரோகிகள் இறைச்சி சாப்பிடுகிறார்கள்.

நிர்வாண நடனம்
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவ, மாணவியர் இரவு 8 மணிக்கு மேல் கலாச்சார நிகழ்ச்சி என்ற பெயரில் நிர்வாணமாக நடனம் ஆடுகிறார்கள். பல்கலைக்கழக வளாகத்தில் தினமும் பயன்படுத்த 3 ஆயிரம் ஆணுறைகளை பார்க்க முடிகிறது.












Click it and Unblock the Notifications