சஸ்பெண்ட் ரத்து உத்தரவால் பலனில்லை.. ஹைதராபாத் பல்கலை. மாணவர் போராட்டம் தொடர்கிறது
ஹைதராபாத்: தலித் மாணவர்களின் சஸ்பெண்ட் தண்டனையை ஹைதராபாத் பல்கலைக்கழகம் நீக்கிய பிறகும், ரோகித் வெமுலா தற்கொலைக்கு நியாயம் கேட்டு அங்கு, சக மாணவர்களின் போராட்டம் தொடருகிறது. மாணவர்கள் போராட்டத்தை பரவவிடாமல் தடுக்க பல்கலைக்கழகம், மற்றும் ஹாஸ்டல்களில் இணையதள சேவை முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.
ஏபிவிபி மாணவர் அமைப்பு நிர்வாகிகளை தாக்கிய பிரச்சினையில், அம்பேத்கர் மாணவர் அமைப்பை சேர்ந்த ரோகித் வெமுலா உள்ளிட்ட 5 மாணவர்களை பல்கலைக்கழக நிர்வாகம் சஸ்பெண்ட் செய்திருந்தது.

இந்த நடவடிக்கையால் மனமுடைந்த ரோகித், விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்தார். இந்த சம்பவத்தை, தலித் மாணவர்களுக்கு எதிரான அணுகுமுறை என கண்டித்துள்ள எதிர்க்கட்சிகள், ரோகித்திற்கு ஆதரவாக நடைபெறும் மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு அளித்து வருகிறது.
இந்நிலையில், போராட்டத்தை தவிர்க்கும் நோக்கத்தில், ரோகித்தோடு சேர்த்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட 4 தலித் மாணவர்களின் தண்டனையை பல்கலைக்கழகம் நேற்று ரத்து செய்தது. ஆயினும், பல்கலைக்கழக துணை வேந்தர் தனது பதவியை ராஜினாமா செய்யும்வரை போராட்டம் தொடரும் என மாணவர்கள் அறிவித்து, இரவு-பகலாக பல்கலை. வளாகத்தில் போராட்டத்தை தொடருகிறார்கள்.
மாணவர் போராட்டம் பரவுவதை தடுக்கும் நோக்கில், பல்கலைக்கழகத்தில் வைஃபை உட்பட அனைத்து வகை இணையதள சேவைகளையும் முடக்கியுள்ளனர் நிர்வாகத்தினர். எனவே, செய்தி சேகரிக்க செல்லும் பத்திரிகையாளர்களிடம் இணையதள டோங்கல்களை பெற்று மாணவர்கள் பயன்படுத்திவருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications