துவாரகாவை தேடி கடலுக்குள் போன மோடி! கிருஷ்ணனின் நகரை வைத்து பிரதமர் போடும் மெகா பிளான்.. பின்னணி
காந்திநகர்: சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி கடலுக்கு அடியில் சென்று, மயில் இறகை வைத்து வழிபாடு நடத்தியிருந்தது பெரும் விவாதங்களை கிளப்பியிருந்தது. இந்நிலையில், அவரது வழிபாட்டிற்கு பின்னால் உள்ள விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
மகாபாரதம் போன்ற பண்டைய புராணகளில் துவாரகை நகரம் குறித்து விவரிக்கப்பட்டிருக்கிறது. இந்த இடம் கிருஷ்ணர் வாழ்ந்த பூமி என்றும் சொல்லப்படுகிறது. இருப்பினும் காலப்போக்கில் கடல் மட்டம் உயர்ந்ததால், இந்த நகரம் கடலுக்கு அடியில் மூழ்கியதாக பலர் கூறுகின்றனர். இது குறித்து இந்திய தொல்லியல்துறை ஏராளமான ஆய்வுகளை நடத்தி இருந்தது.

குஜராத்தின் அரபிக்கடலையொட்டிய பகுதியை ஆட்சி செய்ததாக சொல்லப்படும் மன்னர் சிம்மாதித்தியன், கிபி 574ல் செப்பு பட்டயம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் துவாரகை நகரம் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதனையடுத்துதான் இந்நகரம் குறித்த ஆய்வுகள் தொடங்கப்பட்டன. கடந்த 1963ம் ஆண்டு துவாரகை நகரம் மூழ்கியதாக சொல்லப்படும் அரபிக்கடல் பகுதியில் இந்திய தொல்லியல் துறை ஆய்வை மேற்கொண்டது.
ஆய்வில், துவாரகை நகரம் இருந்ததாகவும், அது கடலில் மூழ்கிவிட்டது உண்மை என்றும் உறுதி செய்யப்பட்டது. இதற்கான சில கட்டுமான சிதைவுகளையும் தொல்லியல் துறை ஆதாரமாக காட்டியது. இதற்கெல்லாம் உச்சமாக கடந்த 2007ம் ஆண்டு தொல்லியல் துறையினர் நடத்திய ஆய்வில் பல்வேறு விஷயங்கள் வெளி உலகத்திற்கு தெரிய வந்தன. இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட அலோக் திரிபாதி, தொல்லியல் துறை ஆய்வில் கண்டுபிடித்த விஷயங்கள் குறித்து தனது புத்தகத்தில் விளக்கியுள்ளார்.
அதாவது, தொல்லியல் ஆய்வில் இரும்பு, செம்பு என 500க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. நீண்ட பிரம்மாண்டமான சுவர்கள், கற்சிலைகள் ஆகியவை சிதைந்த வடிவில் இருப்பதற்கான சான்றுகளும் கிடைத்துள்ளன. இவை அனைத்தும் இங்கு கடற்கரை நகரம் ஒன்று கடந்த காலத்தில் இருந்திருப்பதை உறுதி செய்கிறது என்றும், கிடைக்கப்பெற்ற பொருட்களை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட போது, அவை 7500 ஆண்டுகளுக்கு முற்பட்டவையாக இருப்பது தெரிய வந்திருக்கிறது எனவும் திரிபாதி தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆய்வுகளை தொடர்ந்து குஜராத் அரசு, கடலில் மூழ்கிய துவாரகை நகரத்தை சுற்றிப்பார்க்க ஆழ்கடல் சுற்றுலா திட்டத்தை செயல்படுத்த முயன்று வருகிறது. சுற்றுலாவுக்கு என தனிச்சிறப்பு வாய்ந்த நீர்மூழ்கி கப்பல் உருவாக்கப்பட்டு பயணிகள் ஆழ்கடலுக்கு அழைத்து செல்லப்படுவார்கள். இந்த கப்பலில் ஒரே நேரத்தில் 30 பேர் வரை பயணிக்க முடியும். 300 அடிவரை இந்த கப்பல் பயணிக்கும். பயணிகள் கப்பலில் உள்ள கண்ணாடி வழியாக கடலில் புதைந்திருக்கும் துவாரகை நகரின் எச்சங்களை பார்க்கலாம். இந்த திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில்தான் பிரதமர் நரேந்திர மோடி, ஆழ்கடலில் மூழ்கி மயிலிறகை வைத்து வழிபாடு நடத்தியுள்ளார். இதனையடுத்து துவாரகை நகரம் குறித்த தேடல்களும், ஆர்வமும் மக்களிடைய அதிகரித்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications