கேரளாவின் பிடிவாதம்.. முல்லைப் பெரியாறு நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க துணைக் குழு உத்தரவு
முல்லைப் பெரியாறு அணையில் 3 அடி நீர்மட்டத்தைக் குறைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு முல்லைப் பெரியாறு துணைக்கண்காணிப்புக்குழு உத்தரவு பிறப்பித்துள்ளது.
Recommended Video

டெல்லி: முல்லைப் பெரியாறு அணையில் 3 அடி நீர்மட்டத்தைக் குறைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு முல்லைப் பெரியாறு துணைக்கண்காணிப்புக்குழு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கேரளாவில் கனமழை காரணமாக பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அம்மாநில அணைகள் வேகமாக நிரம்பின.
இதைத்தொடர்ந்து முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்குமாறு தமிழக முதல்வருக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதினார். ஆனால் அணை பாதுகாப்பாக உள்ளது நீர்மட்டத்தை குறைக்க தேவையில்லை என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதில் தெரிவித்தார்.

மீண்டும் விசாரணை
இதையடுத்து நீர்மட்டத்தை குறைக்குமாறு உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு மனுத்தாக்கல் செய்தது. இதுதொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

தமிழகமும் காரணம்
அப்போது கேரள வெள்ள பாதிப்பிற்கு தமிழகமும் ஒரு காரணம் என உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. முல்லை பெரியாறு அணையை திடீரென திறந்து விட்டது பாதிப்பிற்கு காரணம் என்றும் கேரள அரசு தெரிவித்துள்ளது.

தமிழக அரசு ஒத்துழைக்கவில்லை
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திடீரென வெளியேற்றப்பட்ட நீரும் கேரளாவின் இடுக்கி பகுதியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கான காரணங்களில் ஒன்று என்றும் கேரள அரசு தெரிவித்துள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்க தமிழக அரசு ஒத்துழைக்கவில்லை என்றும் கேரள அரசு குற்றம்சாட்டியுள்ளது.

நீர்மட்டத்தை குறைக்க உத்தரவு
இதைத்தொடர்ந்து முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 3 அடி குறைக்க முல்லைப்பெரியாறு துணை கண்காணிப்புக்குழு உத்தரவிட்டுள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 142 அடியில் இருந்து 139 அடியாக குறைக்கப்படும்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications