இந்துத்துவா கொள்கைகளுக்காக "விராட் ஹிந்துஸ்தான் சங்கம்".. தொடங்கினார் சு.சுவாமி
டெல்லி: இந்துத்துவா கொள்கைகளை செயல்படுத்துவதற்காக விராட் ஹிந்துஸ்தான் சங்கம் என்ற புதிய இந்துமதவாத அமைப்பை பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி தொடங்கியுள்ளார்.
இது தொடர்பாக சுப்பிரமணியன் சுவாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ராமர் கோயில் கட்டுவது உள்ளிட்ட இந்துத்துவா பிரச்னைகளில் பாஜகவுக்கு இந்த அமைப்பு அழுத்தம் தரும். மேலும் இது சங் பரிவார் அமைப்புடன் சேர்ந்து பணியாற்றும்.

அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் ராமர் கோயில் பிரச்னையைக் கையில் எடுக்க உள்ளோம். இந்தப் பிரச்னையில் முஸ்லிம்கள் மசூதி கட்டுவதற்கு சரயு நதிக்கரைப் பகுதியில் ஓர் இடத்தை ஒதுக்கிவிடலாம்.
இதுதொடர்பான நீதிமன்ற வழக்குகள் மற்றும் இந்தப் பிரச்னையில் அரசுக்கு அழுத்தம் தருவது ஆகியவற்றின் மூலம் அடுத்த ஆண்டு இறுதிக்குள் இந்தப் பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வருவோம் என்று நம்புகிறோம்.
பாரதிய ஜனதாவின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று அரசியலமைப்புச் சட்டம் 370-ஐ ஒழிப்பது. வரும் 2019 ஆம் ஆண்டு நடைபெறும் லோக்சபா தேர்தலுக்குள் அதனை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்.
எங்களின் இந்த அமைப்பு இந்துக்களுக்கு மட்டுமானது அல்ல. இந்து பாரம்பரியத்தை ஒப்புக்கொள்ளும் முஸ்லிம்களுக்கும் இந்த அமைப்பில் இடம் உண்டு.
இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications