'கிரண்பேடி முதல்வர்' என ட்வீட் போட்ட சு.சாமி இப்போது சுய பரிசோதனை செய்ய சொல்கிறார்!
டெல்லி: நம்மை நாமே சுயபரிசோதனை செய்து கொள்ளும் நேரம் வந்து விட்டதாக தனது கட்சியினருக்கு சூசகமாக டுவிட்டரில் அறிவுரை தந்துள்ளார் பாஜக தலைவர் சுப்பிரமணிய சுவாமி. ஆனால் இதே சுவாமிதான், கிரண் பேடி முதல்வர் என்று அவசரப்பட்டு டுவிட் போட்டு குழப்பியவர்.
டெல்லி சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி ஆம் ஆத்மி அதிக தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இதனால் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
கடந்தாண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று மத்தியில் மோடி தலைமையில் ஆட்சி அமைத்தது பாஜக. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற சட்டசபைத் தேர்தல்களில் பாஜக தனது வெற்றியைத் தக்க வைத்துக் கொண்டது.
தொடர்ந்து மோடி அலை வீசுவதாக நம்புகிறது பாஜக. அதன்படி, தங்களது டெல்லி முதல்வர் வேட்பாளராக கிரண்பேடியை களமிறக்கியது. ஆனால், டெல்லி சட்டசபைத் தேர்தல் முடிவுகள் பாஜக எதிர்பார்ப்பிற்கு எதிராக அமைந்து விட்டது.
இந்நிலையில், பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘நம்மை நாமே சுயபரிசோதனை செய்து கொள்ளும் நேரம் வந்து விட்டது' எனத் தெரிவித்துள்ளார்.
இது மற்ற பாஜக தலைவர்களுக்கு அவர் சூசகமாக கூறும் அறிவுரை எனக் கூறப்படுகிறது. இனியும் தொடர்ந்து மோடி அலையில் சிக்கிக் கொண்டிருக்காமல், கிடைத்த வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ள செயல்பட வேண்டிய நேரம் வந்து விட்டது என அவர் கூறுவது போல் உள்ளது.
Time for introspection, reality check and course correction for the sake of the nation. Tripod mention in tweets has to be re balanced.
— Subramanian Swamy (@Swamy39) February 10, 2015 அதேசமயம், காங்கிரஸையும் அவர் வாரியுள்ளார். இதுகுறித்து விடுத்துள்ள இன்னொரு டிவிட்டில் காங்கிரஸ் கட்சி காணாமல் போனது தனது வாக்குகள் குறித்துக் கவலைப்பாமல், அது பற்றி ஆய்வு செய்யாமல் பாஜகவின் தோல்வியைக் கொண்டாடி வருவது ஆச்சரியமாக இருக்கிறது என்று கூறியுள்ளார் சுவாமி.
ஆனால், இதே சுவாமி தான் சில தினங்களுக்கு முன்னர் கிரண்பேடி தான் டெல்லி முதல்வராக வருவார் என தனது டுவிட்டர் பக்கத்தில் ஆருடம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அந்தர் பல்டி அடித்து அப்படியே மாற்றிப் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Announcing next CM of Delhi is Kiran Bedi
— Subramanian Swamy (@Swamy39) February 7, 2015 -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications