அப்சல்குருவை தூக்கிலிட்டபோது ஏன் ப.சி. வாய் திறக்கவில்லை? தேசதுரோக வழக்கு போடுங்க...இது சாமி
டெல்லி: நாடாளுமன்றத் தாக்குதல் குற்றவாளி அப்சல்குருவை தூக்கிலிட்ட போது முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் ஏன் வாயே திறக்கவில்லை? மத்திய அரசை கவிழ்க்கும் வகையில் தற்போது மக்களைத் தூண்டிவிடும் ப.சிதம்பரம் மீது தேசத் துரோக வழக்கு போட வேண்டும் என்று பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
2001-ம் ஆண்டு நாடாளுமன்றம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதல் வழக்கில் 2013-ம் ஆண்டு அப்சல்குரு தூக்கிலிடப்பட்டார்.

அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட நாளில் டெல்லி ஜஹவர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் அவருக்கு ஆதரவாக நிகழ்ச்சிகள் நடத்தப் போய் பெரும் களேபரம் ஏற்பட்டுள்ளது. மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமார் உள்ளிட்டோர் மீது தேசத் துரோக வழக்கு போடப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக பேட்டியளித்திருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தனிப்பட்ட கருத்தாக அப்சல்குருவுக்கு நாடாளுமன்றத் தாக்குதலில் தொடர்பிருக்குமா? என சந்தேகம் எழுப்பியிருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ப.சிதம்பரத்தின் கருத்தை விமர்சித்து பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி கூறியதாவது:
எந்த நோக்கத்துக்காக ப.சிதம்பரம் இப்படி சொன்னார் என்பது ஆச்சரியாம இருக்கிறது..... அவரை அறிக்கை தருமாறு கேட்டுக் கொள்ளாமல் இப்படியான முட்டாள்தனமான அறிக்கைகளைக் கொடுக்கமாட்டார்...
இது தீவிரவாதிகளுக்கு ஊக்கமளிக்கும் நடவடிக்கை. ஜம்மு காஷ்மீரில் மோசமான எதிர் விளைவுகளை ஏற்படுத்தும். ப.சிதம்பரம் எதற்காக இத்தனை ஆண்டுகாலம் காத்திருந்தார்...
அப்சல்குரு தூக்கிலிட்டபோது முந்தைய அரசில் அமைச்சராகத்தானே இருந்தார்...அப்போது ஏன் வாயைத் திறக்கவில்லை.... அப்சல்குரு உடலை குடும்பத்திடம் ஒப்படைக்கக் கூடாது என மத்திய அரசு முடிவெடுத்தபோதும் அவர் வாயைத் திறக்கவில்லை.
ப.சிதம்பரத்தின் இந்த பேச்சு தேசத் துரோகமாகும். அவர் மீது தேசத் துரோக பிரிவான 124-Aன் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications