வைகோவை பாஜக கூட்டணியிலிருந்து நீக்க வேண்டும் (இன்னுமா இருக்காரு?!) - சு சாமி
டெல்லி: தமிழகத்தில் பாஜக கூட்டணியிலிருந்து வைகோவை நீக்க வேண்டும் என்று சுப்பிரமணிய சாமி கூறியுள்ளார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்தது வைகோவின் மதிமுக. பெரும் தோல்வியைத் தழுவியது. தேர்தலுக்குப் பின் மோடியின் தலைமையில் பாஜக அரசு அமைந்த பிறகு, இலங்கை தமிழர்கள் விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டை கடுமையாக எதிர்த்து வருகிறார்.
சிங்கள அரசுடன் நல்லுறவைப் பேணுவதற்காக மோடி அரசு தமிழர்களை பலியாக்கப் பார்க்கிறது என பகிரங்கமாக விமர்சித்துள்ளார்.

மேலும் பாஜக கூட்டணியில் இனியும் தொடர முடியாது என்ற நிலைப்பாட்டுக்கு வைகோ வந்துவிட்டார்.
இந்த நிலையில் அவரை பாஜக கூட்டணியிலிருந்து நீக்க சுப்பிரமணிய சாமி கோரியுள்ளார்.
இது குறித்து அவர் விடுத்த அறிக்கையில், "தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அங்கமாக இருந்து வரும் மதிமுக, கூட்டணி தர்மத்தை மீறி விட்டது. அதன் தலைவர் வைகோ கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.
இதுகுறித்து கட்சியின் தலைவர் அமித் ஷாவுக்கும், தமிழக பாஜக பொறுப்பாளர் ராஜிவ் பிரதாப் ரூடியுடனும் பேசப் போகிறேன். மதிமுக தலைவர் வைகோ தேச விரோத மற்றும் பிரிவினைவாதப் போக்கை முன்வைத்துப் பேசி வரும் சூழலில் அக்கட்சி இனியும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர வேண்டுமா என நோட்டீஸ் அனுப்பக் கோரவிருக்கிறேன்," என்று கூறியுள்ளார்.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications