மே.வங்கத்தில் உங்களுக்கு வெற்றி கிடைக்காது.. வேணும்னா ரசகுல்லா கிடைக்கும்.. பாஜ-வை கலாய்த்த மம்தா
கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் உங்களுக்கு வெற்றி எல்லாம் கிடைக்காது, ரசகுல்லா வேணும்னா கிடைக்கும் என பாரதிய ஜனதாவினரை கிண்டலடித்துள்ளார் மம்தா பானர்ஜி.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தக்ஷின் தினாஜ்பூர் மாவட்டத்திலுள்ள பாலுர்காட் மக்களவைத் தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் அப்போது பேசிய அவர் மேற்கு வங்கத்தில் தாங்கள் வெற்றி பெற்றால் லட்டு கிடைக்கும் என்று பேசிய மோடியை கிண்டல் செய்தார் மேற்குவங்க மாநிலத்தில் பெரிய எண்ணிக்கையில் வெற்றி பெறுவோம் என்று எண்ணிக் கொண்டிருக்கும் பாஜகவுக்கு ரசகுல்லாதான் கிடைக்கும் என்றார்

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் தன்னை டீ விற்பவராக காட்டிக் கொண்ட மோடி இப்போது தன்னை சவுகிதார் என்று கூறிக்கொள்கிறார் ஆனால் தேர்தல் முடிந்த பின் அவருடன் சவுக்கி(கட்டில்) மட்டுமே இருக்கும் என்றார், ஆந்திரா, கேரளா தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் ஒரு இடத்தை கூட பாஜக பெறாது. மொத்தம் 100 இடங்களைக் கூட பாஜக வெல்லாது. இப்போதே பல அட்டூழியங்களை செய்து வரும் பாஜக மீண்டும் வென்றால் நாம் பேசுவற்கு கூட கட்டுப்பாடு விதிப்பார்கள்
மேற்கு வங்கத்தில் பாதிக்குப்பாதி இடங்களையாவது பிடிக்க இலக்கு வைத்துள்ளார்கள் பாரதிய ஜனதாவினர் ஆனால் அவர்களுக்கு லட்டுவுக்கு பதிலாக ரசகுல்லாதான் (பூஜ்ஜியம்) கிடைக்கும். கடந்த 2014 ம் ஆண்டு தேர்தலிலாவது 2 இடங்களை வென்றார்கள் ஆனால் இந்த தேர்தலில் ஒரு இடத்தை கூட அவர்கள் பெறப் போவதில்லை என்று மம்தா கூறியுள்ளார்.
-
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் ஆலோசனை -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
"எங்களை பாஜக கொல்ல பார்க்கிறது.." வங்கத்தை அதிர வைத்த மம்தாவின் குரல்.. உச்சக்கட்ட பதற்றம் -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே!












Click it and Unblock the Notifications